தமிழ்ப் புதல்வன் திட்டம்: கோவையில் நாளை துவக்கி வைக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

Continues below advertisement

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவருக்கு, கோவை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர்  அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது  தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள்,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. இதன் காரணமாக இலட்சக்கணக்கான மாணவர்கள் பயனடை உள்ளார்கள்.

Continues below advertisement

உக்கடம் மேம்பாலம் திறப்பு

பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய  ஊர்களுக்கு  விரைந்து செல்லும் வகையில்  நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால் கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIVE | Kerala Lottery Result Today (08.08.2024): இன்றைய கேரளா லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு தொகை ரூ. 80 லட்சம்

கருணாநிதி சிலை திறப்பு

மேலும், இவ்விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும்  சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை  திறந்து வைக்க உள்ளார். இவ்விழாவில் பல்வேறு அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர்,  மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலாளர், சமூக நலன் மற்றும்  மகளிர்  உரிமைத் துறை சமூக நல ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் 12 மணியளவில் கணியூர் பகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் மதியம் 1 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின், கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  

Continues below advertisement