தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நாகார்ஜூனா.இவரது முதல் மகனான நாக சைத்தன்யாவிற்கும் சமந்தாவிற்கும் சமீபத்தில் விவாகரத்து ஆன நிலையில் இது குறித்து வரும் செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் , நாகசைத்தன்யா தரப்பு  எந்தவொரு விளக்கமோ ரியாக்டோ செய்யாமல் இருந்தன.  


இந்த நிலையில் நாகசைத்தன்யா மற்றும் நாகார்ஜூனா இருவரும் சேர்ந்து நடித்து சமீபத்தில் வெளியான பங்காரு ராஜு படத்திற்கான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டவர்கள் தங்கள் குடும்பம் குறித்து வரும் செய்திகளுக்கு எதிர்வினையாற்றியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்ள எனக்கு பிடிக்காது . எனக்கு மிகவும் பிடித்த அல்லது படங்கள் குறித்தான விஷங்களை மட்டுமே நான் பகிர்ந்துகொள்வேன் என்றார் நாக சைத்தன்யா. அதன் பிறகு பேசிய நாகார்ஜூனா “ஆமா...ஏன் சிலர் இப்படி சமூக வலைத்தளங்களோடு ஒன்றிப்போகியுள்ளார்கள். நான் இதை செய்தேன்..அதை செய்தேன் என எல்லாத்தையும் ஏன் அப்லோட் பண்ணுறாங்க...உங்களுடைய வாழ்கை வரலாற்றை மற்றவர்களுக்கு ஏன் காட்டுறீங்க” என்றார்.






மேலும் தன் வாழ்க்கையில் தனக்கு மிகவும் தொந்தரவாக இருப்பது , தன் குடும்பத்தை பற்றி எழுதுவதுதான் . தன்னை பற்றி ஏதாவது எழுதினால் சரி , ஆனால் என் குடும்பத்தை பற்றி கேவலமாக எழுதுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நல்ல பழுத்த மரத்தின் மீதுதான் கல்லடி படும் என ஒரு பழமொழி உண்டு , அப்படியாகத்தான் இதை தான் எடுத்துக்கொள்வதாக நாகர்ஜூனா கூறியுள்ளார். யூடியூப் பக்கத்தை திறந்தாலே அருவருப்பாக இருக்கிறது. எல்லாம் தங்களின் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் ஃபில்டரை பயன்படுத்தி பதிவிடும் சில வீடியோக்கள் மீது விருப்பம் இல்லை என்பதை தெரிவிப்பதாக கூறுகிறார் நாகர்ஜூனா. 






நாக சைத்தன்யா இது குறித்து கூறுகையில்  மீடியாவை பொருத்தவரையில் அவர்கள் என்ன எழுத விரும்புகிறார்களோ எழுதட்டும் . அது அவர்களது வேலைதான். அந்த வேலையை பொறுத்து அவர்களின் தரம் தெரிந்துவிடும். எழுதுவது மாற்றிக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு அதற்கு ரியாக்ட் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அது குடும்ப விஷயமாக இருந்தாலும் சரி , தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி. செய்திகள்தான் செய்தியை உருவாக்குகிறது. நான் ரியாக்ட் செய்த படிகளை எல்லாம் கடந்து வந்துவிட்டேன். அதனை கண்டுகொள்வதில் எனக்கு விருப்பமில்லை என தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார்.