நடிகை சமந்தாவுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு நடிகர் நாக சைதன்யா அளித்த பதிலை பார்க்கலாம். 


அண்மையில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடம், சமந்தாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சைதன்யா, “ ஒரு வேளை அது நடந்தால் ரொம்பவும் அமர்க்களமாக  இருக்கும். ஆனால் அது எப்போதும் நடக்கும் என தெரியவில்லை. அது அந்த யூனிவர்ஸ்க்கு மட்டும்தான் தெரியும். பார்க்கலாம்” என்று பேசியிருக்கிறார். 


 






முன்னதாக சமந்தா, நாக சைதன்யா சமந்தமான செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாவதை பற்றி பேசியிருந்த நாக சைதன்யா, “ நான் அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இந்த பதிலின் மூலம் அவர்களுக்கு இதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் விஷயத்தில் சமந்தாவும் அதில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதனால் இந்த உலகம் சொல்வதிற்கு தான் பதில் சொல்ல தேவையில்லை” என்று பேசியிருந்தார். 


தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


விவாகரத்து அறிவிப்பு


இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தன.


 






தி பேமிலி மேன்


சமந்தா நடிப்பில் 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ், புஷ்பா பாடல் உட்பட மேலும் சில படங்கள் வெளியானது முதல், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. சமந்தாவின் உச்சபட்ச கவர்ச்சி, நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், அதுவே இருவரும் பிரிவதற்கு காரணமாகவும் அமைந்ததாக ஏராளமான கருத்துகள் இணையத்தில் பரவின.