வேலையில்லா பட்டதாரி படம் தொடர்பான வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கடந்த 2014 ஆண்டு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ்,அமலாபால், விவேக், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. அனிருத் இசையமைத்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் 2017 ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியானது. 


இதனிடையே இப்படத்தில் நடிகர் தனுஷ்  புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அப்போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 






 இந்த வழக்கின் விசாரணையின் போது பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆஜராகி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 15 ஆம் தேதி  இருவரும் ஆஜராக  நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 


இதனை விசாரித்த நீதிபதிகள், அவர் ஆஜராக விலக்கு அளித்து விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனிடையே  படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் தனுஷ் சென்னை திரும்பிய நிலையில் இவ்வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்ககோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வேலையில்லா பட்டதாரி படம் தொடர்பான வழக்கில் இருந்து தனுஷ் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உத்தரவிட்டனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண