நடிகை சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் வெளியே வந்தனர். இதனையடுத்து இருவரும் எதற்காக பிரிந்தோம் என்பது குறித்து எதுவும் கூறாமல் இருந்தனர்.


சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியானார். அவர் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், ஹாலிவுட் படம், புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் என தன் கேரியரின் கிராஃபில் உச்சத்தில் சென்றுகொண்டிருக்கிறார். இடையில் சமந்தா, என்னுடைய கருத்துக்களும் செயல்களும் ரசிகர்களின் கருத்துக்கு ஏற்ப இல்லாவிட்டால் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்சனைகளை எப்படி அவர்களுக்கு உணர்த்த முடியும்.  அவர்கள் நிச்சயம் ட்ரால் செய்வார்கள் ,உங்களை கஷ்டப்படுத்துவார்கள். ஆனால் இதே போல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்புதானே.




விவாகரத்து என்பது மிகவும் வேதனையான செயலாகும் அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் வேண்டும். அது ஒருபுறம் இருக்கட்டும் தனிப்பட்ட முறையில் என் மீதான இந்தத் தாக்குதல் இடைவிடாது இருக்கிறது. இருப்பினும் இது போன்ற எதையும் என்னை உடைத்துவிட முடியாது.


இந்த ஆண்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அனைத்தும் எந்த திட்டமும் இல்லாமல்தான் நடந்தது. கவனமாக தீட்டப்பட்ட  திட்டங்கள் அனைத்துமே நொறுங்கிவிட்டது. அதனால் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எதிர்காலம் எனக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறதோ அதனை சிறப்பாக செய்ய நான் காத்திருக்கிறேன்” என பேசியிருந்தார்.




இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா சமீபத்தில் பேசுகையில், “நான் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்யும் போது அது ஒருபோதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன்” என கூறியிருக்கிறார்.


முன்னதாக, இருவரின் திருமண முறிவுக்கு காரணம், சமந்தா திருமணத்திற்கு பிறகு ஃபேமிலி மேன் சீரிஸில் ஏற்றுக்கொண்ட வேடங்கள் போலவே தொடர்ந்து ஏற்றுவந்ததாகவும் இது நாக சைதன்யாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. தற்போது நாக சைதன்யாவின் இந்தப் பேச்சை வைத்து ஒருவேளை அந்தத் தகவல் உண்மையாக இருக்குமோ எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். 


அதேசமயம், பிரிவுக்கு உண்மையில் இதுதான் காரணமென்றால், சினிமா துறையில் இருந்துகொண்டு நடிப்பை நடிப்பாக பார்க்காமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அதனை குழப்பி கொள்வது நியாயமில்லை எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.