Aadhaar Voter ID Linking: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார அட்டை இணைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.    

Continues below advertisement

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார அட்டை இணைக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Continues below advertisement

வாக்காளர் பட்டியலை திறமையான முறையில் கையாள ஏதுவாக, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2015ம் ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் சீர்படுத்துதல் திட்டத்தைத் தொடங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் சுய விருப்பத்தின் பேரில் 32 கோடி வாக்காளர் அட்டையுடன்  ஏற்கனவே ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் கட்டாயமில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இந்த திட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கைவிட்டது.   

Women Marriage Age: பெண்ணின் திருமண வயதை அதிகாரிக்கும் சட்டத் திருத்த மசோதா - மத்திய அமைச்சரவை ஒப்புதல்! 

இந்நிலையில், நாட்டின் அனைத்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைசச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் தேர்தலில் பங்கேற்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சீர்திருத்தவம் செய்யவும் இந்த முயற்சி பலனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதகங்கள்:  

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார அட்டை இணைக்கும் முயற்சி ஜனாயகத்தின் அடிப்படைக் கூறுகளை கேள்விக் கேட்பதாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

முதலாவதாக, ஆதார் இணைப்பின் மூலம் வாக்காளர்களின் மொழி, சாதி, மதம், தொலைபேசி எண் போன்ற தகவல்களை அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. ஆதார் தகவல்கள் மூலம், தேர்தல் தொகுதிகளை பிரிக்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஏற்றவாறு எல்லைகளை வகுக்கப்படலாம் என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது.இவ்வாறு பிரிக்கப்படும் தேர்தல்  தொகுதிகள் கெர்ரிமாண்டர் எனப்படும்.

 நடந்து முடிந்த புதுவை சட்டமன்றத் தேர்தலில், பாஜக சார்பில், ஆதாருடன் இணைக்கப்பட்ட வாக்காளர்களின் மொபைல் எண்களுக்கு மட்டும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட விவாகராம் பேசும் பொருளானது. ஆதார் தகவல் திருடப்பட்டதா?   என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.   

மேலும், தெலங்கானாவில் ஆதார அட்டையுடன் இணைத்து உருவாக்கப்பட்ட தேர்தல் வாக்காளர் பட்டியலில்  சுமார் 8 சதவிகித மக்களின் பெயர் விடுபட்டு இருந்தது. மேலும், எண்ணற்ற போலி ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பத்திருப்பதை ஆதார் அடையாள ஆணையம் ஏற்கனவே உறுதி செய்திருந்தது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola