‘நானே வருவேன்’ படத்தில் இருந்து வெளியாக இருக்கும் இராண்டாவது சிங்கிள் குறித்தான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 

 

Continues below advertisement

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ளது. முன்னதாக படத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி போஸ்டர் ஒன்று  வெளியானது.

 

இதனைத் தொடர்ந்து  "வீரா சூரா” என தொடங்கும் முதல் பாடல் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்தின் டீசர் செப்டம்பர் 15 ஆம் வெளியாகி வரவேற்பை பெற்றது. கூடவே படமானது செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. 

அண்மையில் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் படத்தின் இராண்டாவது சிங்கிள் பாடலான  ‘ரெண்டு ராஜா’ பாடல் நாளை காலை 10.50 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.