நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 






துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.


கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ளது. ரிலீசுக்கு தயாராகியுள்ள இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி வெளியானது. 






இதனைத் தொடர்ந்து  "வீரா சூரா” என தொடங்கும் முதல் பாடல் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்தின் டீசர் செப்டம்பர் 15 ஆம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் படமானது செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்தை எதிர்நோக்கியுள்ளனர். 



இந்நிலையில் அனைவரது எதிர்பார்ப்பின் படி நானே வருவேன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் காதல் கொண்டேன் படத்தை நினைவூட்டும் வகையில் தனுஷின் நடிப்பு உள்ளது. இதேபோல் படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.