ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை குஷ்பூ. அந்த சமயத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த கமல், ரஜிகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக், சத்யராஜ் என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாடியவர் நடிகை குஷ்பூ. ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். ரசிகர்கள் குஷ்பூ மீது இருந்து அளவு கடந்த பிரியத்தால் அவருக்கு கோயிலே கட்டினார்கள். அந்த அளவிற்கு உச்சியில் இருந்தவர் நடிகை குஷ்பூ.
காதல் முதல் பிரிவு வரை:
குஷ்பூ மற்றும் பிரபு இருவரும் ஜோடியாக சின்ன தம்பி, மை டியர் மார்த்தாண்டன், வெற்றி விழா, பாண்டித்துரை, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் என பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளும். அதற்கு சின்ன தம்பி படம் ஒன்றே உதாரணம். இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தும் அந்த சமயத்தில் தான் என்ற பல கிசுகிசுக்கள் வெளியாகின. இவர்கள் இருவரின் பிரிவிற்கும் காரணம் நடிகர் பிரபுவின் தந்தையான நடித்தார் திலகம் சிவாஜி கணேசன் தான் என சினிமா வட்டாரங்கள் கூறின.
தெளிவுபடுத்திய குஷ்பூ:
இது பற்றி நடிகை குஷ்பூவிடம் கேட்டதற்கு, இருவருக்கும் இடையில் ஒரு அழகான உறவு இருந்தது ஆனால் அது முடிவுக்கு வந்தது என்பதை மிகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதற்கு பிறகு தான் நடிகை குஷ்பூ - இயக்குனர் சுந்தர்.சி திருமணம் நடைபெற்றது. அவர் என் வாழ்வில் வந்த பிறகு அவரே என் சகலமும் ஆனார் என்றார் குஷ்பூ. இருவரும் அவரவரின் வாழ்க்கையில் சந்தோஷமாக பயணிக்கும் போது பழைய கதைகளை பேசி என்ன சங்கடப்படுத்த வேண்டும். இன்றும் இவர்கள் இருவரின் மத்தியில் நல்ல நட்பு உள்ளது.
நாட்டாமை ஜோடி :
நடிகர் சரத்குமார் - குஷ்பூ ஜோடியும் திரையில் மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த ஜோடி என்றவுடன் நம் நினைவிற்கு சட்டென்று ஃபிளாஷ் ஆவது "நாட்டாமை" திரைப்படம். அந்த படத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் பாடலான "கொட்ட பாக்கும்... கொழுந்து வெத்தலையும்..." பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல். இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும் இந்த பாடலின் இனிமையான குரலுக்கு சொந்தகாரர் எஸ். ஜானகி.
ட்ரெண்டிங் போட்டோ கிளிக்:
குஷ்பூ - பிரபு - சரத்குமார் மூவரும் தற்போது இளைய தளபதிய விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கிறார்கள் என்பது ஒரு சந்தோஷமான செய்தி. வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது மூவரும் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அன்றைய முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்கள் இன்றும் அதே நட்புடன் பழகுவது இன்றைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டு.