துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5ஆவது முறையாக ஜோடி சேர்ந்த திரைப்படம் நானே வருவேன்.



பொன்னியின் செல்வன் படத்தால் பாதிப்பா ?

கலைப்புலி.எஸ். தாணு தயாரித்த இப்படத்தில் கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது  யுவனின் இசை இந்தப் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. எப்போதும் தனது படங்களுக்கு பிரோமோஷனை பிரமாண்டமாக செய்யும் கலைப்புலி தாணு இந்தப் படத்திற்கு அந்த அளவிற்கு பெரிதாக பிரோமோஷன் செய்யவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது. மேலும் இப்படம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசானது.


இதற்கு அடுத்த நாள் இயக்குனர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1 ' படம் வெளியானதால்  நானே வருவேன் ரசிகர்கள் மத்தியில் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் படம் சூப்பராக இருப்பதாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.


 


 

ஓடிடி  தளத்தில் "நானே வருவேன்" :

படம் திரையரங்குகளில் வெளியாகி சுமார் ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில் அக்டோபர் 27ஆம் தேதியான நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடி மூலம் வெளியான நானே வருவேன் திரைப்படம் மூலம் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். 

 







இரண்டு வெவ்வேறு கதாபாத்திரம் :

தென்னிந்திய சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ் "நானே வருவேன்" திரைப்படத்தில் இரண்டு வெல்வேறு குணாதிசயங்கள் கொண்ட நடிகராக இரட்டை வேடத்தில் பிரபு மற்றும் கதிர் எனும் கதாபத்திரங்களில் நடித்திருந்தார். இரண்டு கதாபாத்திரங்களுக்கு தேவையான உணர்ச்சிகளை மிகவும் அசாதாரணமாக வெளிப்படுத்தி இருந்தார். இருவரும் வெவ்வேறு துருவம் என்றாலும் தனது நடிப்பில்  தனுஷ் வித்தியாசத்தைக் காட்டியது சிறப்பு.

 

இப்படத்தில் ஒரு வில்லன் போல காட்சியளித்தாலும் மிகவும் மாஸாக இருந்தது கதிர் கதாபாத்திரம். தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட நெகடிவ் ரோலையும் வெகு சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துவிட்டார். கதிர், பிரபு இரண்டு கதாபாத்திரங்களையும் ரசிக்கும் வகையில் இப்படத்தை ஓடிடி தளத்தில் அமேசான் பிரைம் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.