நான் கடவுள் :


தமிழ் சினிமாவில் மாறுபட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் இயக்குநர் பாலா.  இவரது கதைகள் அனைத்துமே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை வேறு கோணத்தில் படம்பிடித்துக்காட்டியிருக்கிறது. அந்த வகையில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘நான் கடவுள் ‘ திரைப்படம் பலருக்கு நினைவிருக்கும். சார்மிங் பாயாக இருந்த ஆர்யா நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்து , தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். படத்தில் நாயகியாக பூஜா நடித்திருந்தார். பார்வை குறைபாடு உள்ள பெண்ணாக அவரின் நடிப்பு அசாத்திய பாராட்டை பெற்றது. இந்த படத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் மாற்றுத்திறனாளிகள் பலரும் நடித்திருந்தனர்.


 





நான் கடவுள் ‘கிருஷ்ண மூர்த்தி’:


புகைப்படத்தை பார்த்தவுடனேயே நீங்கள் கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களை அடையாளம் கண்டுருப்பீர்கள்! நான் கடவுள் படத்தில் சாமியாராக நடித்திருப்பார். உண்மையில் அவர் ஹோமியோபதி படித்தவர் என்றும் பல துறைகளில் பட்டம் பெற்றவர் என்றும் தெரிவிக்கிறார்.  இசை என்றால் கிருஷ்ணமூர்த்தி ஐயாவிற்கு அத்தனை ஈடுபாடாம் . அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான் அவரின் கனவு என்கிறார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகு புத்தகத்தை படித்து அதில் இன்ஸ்பயர் ஆனவர் அப்துல் கலாமிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதனை படித்தவுடன் அப்துல் கலாம் , கிருஷ்ண மூர்த்தி ஐயாவை நேரில் அழைத்து ஒரு நண்பரிடம் பேசுவது போல சகஜமாக பேசினாராம்.




சம்பளம் தராத பாலா :


கிருஷ்ண மூர்த்தி ஐயாவின் சாதனைகள் குறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியானது. அதனை பார்த்துதான் நான் கடவுள் படத்தில் நடிக்க அவரை அனுகியுள்ளனர். ஆனால் அவருக்கு சினிமாவில் நடிக்க அவ்வளவு விருப்பம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் தூண்டுதலின் பேரில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு சம்பளமாக பாலா ஒரு லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் நடித்து முடித்தவுடன் , பேசியபடி ஒரு லட்சமல்ல, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என வருந்துகிறார் கிருஷ்ண மூர்த்தி. அந்த படத்திற்கு பிறகு தனக்கு சில படங்களில் சினிமா வாய்ப்பு வந்தாலும்  தன்னை ஏமாற்றிய சினிமா துறையின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான் தொடர்ந்து நடிக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண