நாள்: 11.07.2022
நல்ல நேரம் :
காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
எமகண்டம் :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
சூலம் –கிழக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று நீங்கள் எளிதான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத் தரும்.இன்று புதிய பணி வாய்ப்புகளை இழக்கும் அதிர்ஷ்டமற்ற நிலை காணப்படும். இன்று ஏமாற்றமான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். இதனால் உங்கள் மன உறுதியை இழந்து விடாதீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே,இன்று உங்களிடம் தைரியமான உறுதியான அணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வளர்ச்சியும் வெற்றியும் அடைவீர்கள். பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் செயல்திறனில் நல்ல தரத்தை பராமரிக்க இயலும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, இன்று நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் செயல்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று பண வரவு அதிகமாக காணப்படும். அதனை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று சவாலான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் வெறுமையை உணர்வீர்கள். உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உங்கள் கடின உழைப்பிற்கு தகுத்த பலன்கள் கிடைக்காது. இதற்குஉங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடாததே காரணம்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இந்தச் சூழலைக் திறமையாகக் கையாள முடியும்.பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. பயனுள்ள யுத்திகளைக் கையாண்டு கவனமாக பணியாற்றினால் பணிகள் சுமூகமாக நடக்கும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடனும் காடுப்பட்டுடனும் காணப்படும் சிறந்த நாள். இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி பெறுவீர்கள். பணப்புழக்கம் இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன்படுத்துவீர்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்குகளில் வெற்றி அடையலாம்.பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. இந்து கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, அமைதியாக இருப்பதன் மூலம் முறையான முடிவுகளை எடுக்க இயலும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் பதட்டமின்றி சமநிலையில் இருக்கலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேரலாம். எனினும் கவனமாகப் பணியாற்றினால் இன்று சிறப்பாக இருக்கும்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, இன்று பதட்டமும் கவனமின்மையும் காணப்படும். இதனை சமாளிக்க அமைதியை மேற்கொள்ள வேண்டும். இன்று சகஜமான அணுகுமுறையுடன் உங்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் பதட்டம் காரணமாக தாமதமாக பணிகள் நடைபெறும். பணிகளைக் கையாளும் போது பொறுமையான அணுகுமுறை தேவை.
மகரம் :
மகர ராசி நேயர்களே, உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம். இன்று சிறந்த முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள்.உங்கள் திறமைகள் வெளிப்படும். அது உங்கள் செயல்திறனில் பிரதிபலிக்கும். உங்கள் சக பணியாளர்களுக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று ஸ்திரமான. இலக்குகளை வெல்லக்கூடிய இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை தரும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தவிர்த்தல் வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்