நடிகர் வடிவேலு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் சிறிய ப்ரோமோவை பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெகு நாட்களாக படத்தின் ரிலீஸ்காக காத்திருந்த வடிவேலு ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாக உள்ளது.
இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி :
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் தொடங்கியுள்ளார். 2017ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு மீண்டும் தனது ரீ என்ட்ரி மூலம் ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்க தயாராகிவிட்டார்.
மாஸ் என்ட்ரி கொடுக்கும் வடிவேலு :
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தில் படத்தின் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு என்பதால் எதிர்பார்ப்பு படம் குறித்த முதல் அறிவிப்பு வந்த நாள் முதலே இருந்து வருகிறது. இந்த முழு நீள காமெடி திரைப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த் ராஜ், முனிஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் நான்கு பாடல்களையும் வடிவேலுவே பாடி அசத்தியுள்ளார். ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக வெளியான 'அப்பத்தா' பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கியது.
வெளியான ரிலீஸ் தேதி :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருக்கும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனும் அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வகை புயல் வடிவேலுவின் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.