லோகேஷ் குமார் இயக்கத்தில் மைக்கெல் தங்கதுரை, கேப்ரில்லா செல்லஸ், அனுபமா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் என்4. இப்படத்திற்கு பாலசுப்ரமணியன்.ஜி இசையமைத்துள்ளார். படம் விரைவில் வெளியாகவுள்ள சூழலில் படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 


 






அது என்ன ’என் 4’ அப்படினு ஒரு தலைப்பு ?


அலப்பறை இல்லாம தயாராகிக்கொண்டிருக்கும் என் 4 திரைப்படத்தின்  நாயகி கேப்ரியலா தற்போது சின்னத்திறையில் நாயகியாக நடித்து வருகிறார். நாயகன் மைக்கல் நடன நிகழ்ச்சி மூலம் நமக்கெல்லாம் பரீட்சியமானவர்தான். அது என்ன என் 4 என படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள் என கேட்கலாம். வட சென்னையில் பிரபலமான காசிமேடு பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்குதான் என்.4 என பெயர். இதனை மையமாக கொண்டு கதை நகர்வதால் இப்படத்திற்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்களாம். மைக்கேல் - கேபி தவிர படத்தில் இன்னும் இரண்டு ஜோடிகள் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். இந்த மூன்று  ஜோடி கதாபாத்திரத்திற்கு இடையில் நடக்கும் சிக்கலான கதைதான் என் 4.படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல சர்வதேச அங்கீகாரங்களை பெற்று வருகிறது.






 


ஹைப்பர் லிங் கதை :


படம் ஹைப்பர் லிங்காக உருவாக்கப்பட்டுள்ளது. அறியாமல் செய்யும் ஒரு சிறு தவறு எப்படி மிகப்பெரிய சிக்கலை உருவாக்கி விடுகிறது என்ற வழக்கமான ஒன்லைனை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் . இருந்தாலும் இதனை சூப்பர் டூப்பர் த்ரில்லர் கதை என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். படம் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில்  வெளியான என் 4 படத்தின் டிரைலரை கீழே காணலாம்.