நடிகர் தனுஷின் குடும்பமே சேர்ந்து எடுத்த படம் ரீ ரிலீஸ் ஆவதால், அவரது ரசிகர் பட்டாளம் என்ன செய்யப் போகிறது என சினிமா வட்டாரங்கள் ஆவலோடு காத்துக் கிடக்கிறது.


தமிழ் சினிமவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தன்னுடைய ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர். அதேபோல் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியும் வெற்றிக் கூட்டணியாக இதுவரை இருந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பிற்காக தேசிய விருது வாங்கிய திரைப்படங்கள் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்தவை.  


இவர்கள் கூட்டணியில் வட சென்னை இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடிகர் தனுஷ் தனது அண்னன் இயக்குநர்  செல்வராகவனின் திரைக்கதையிலும், தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்திலும் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்படம் 2002ல் வெளிவந்தது.   மேலும் செல்வராகவனின் இயக்கத்தில் இவர் நடித்த புதுப்பேட்டை, மயக்கம் என்னை போன்ற படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திலும், நானே வருவேன் படத்திலும் பணியாற்றி வருகின்றனர்.


துள்ளுவதோ இளமை படம் வெளிவந்த போது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. அதில் தனுஷுக்கு ஜோடியாக, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷெரின் நடித்திருந்தார். விமர்சனத்தினைக் கடந்தும் இளைஞர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தினை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படம் ஜூலை 8ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பினைப் பெரும் என்ற நம்பிக்கை படக்குழுவிடம் உள்ளது. ஏற்கனவே இயக்குநர்  செல்வராகவன் இயக்கத்தில் வெளியான, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களின் வேண்டுகோளின்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தினை தொடர்ந்து, இந்த வாரத்தில் யோகிபாபு மற்றும் கருணாகரன் நடித்துள்ள நகைச்சுவை ஜேனர் படமான பன்னிக் குட்டி படமும் ரிலீஸாகிறது. மேலும் உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஒ.டி.டி தளமான ஹாட்ஸ்டாரில் ஜூலை 7ம் தேதி முதல் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண