லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரிய் அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் என்கிற குட்டி ட்விஸ்ட். மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருப்பவர் ‘மைனா’ நந்தினி. அண்மையில் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்தும் படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.  


“படத்தில் ஒரு காட்சியில் நானும் விஜய் சேதுபதியும் உரையாடுவது போன்ற சீன் வரும். கணக்கு விவரம் எல்லாம் நான் சொல்லுவேன். அப்போ மூன்றாவது மனைவியா வர ஷிவானி க்ராஸ் ஆவாங்க. இதோ போறாளே உன்னோட மூணாவது அவளுக்கு பத்து லட்சம்னு சொல்லுவேன். மற்றொரு சீனில் யாரையோ கொலை செய்துட்டு இங்கே பொண்டாட்டியுடன் ஆசையாக மீன் சாப்பிடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த காட்சியெல்லாம் நீக்கப்பட்டது பெரிய வருத்தமில்லை. படத்தில் நடித்ததே சுவாரஸ்ய அனுபவம்தான். விஜய் சேதுபதி சார் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவார். புதுசா எதையாச்சு கத்துக்கிட்டே இருப்பார். நான் முதலில் ஒன்றாக சேர்ந்து நடிச்ச பெரிய கோ-ஸ்டார் அவர் தான் என்பது பெருமையாக இருக்கு”என்றார்.



முன்னதாக,


கமல்ஹாசன் தவிர விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா ஆகியோர் நடித்துள்ள இந்த படம்,  ஜுன் 3ஆம் தேதி ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.


இந்நிலையில்,  வெற்றியை பிரம்மாண்டமாக படக்குழு கொண்டாடி வருகிறது. படத்தின் வெற்றியால் நல்ல லாபம் பார்த்துள்ள கமல், படகுழுவினருக்கு பரிசுகளை அள்ளித்தூவி வருகிறார். இயக்குநருக்கு கார், துணை இயக்குநர்களுக்கு பைக், சூரியாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என சந்தோஷ குஷியில் இருக்கிறார் கமல்.


பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜும், நடிகர் கமல்ஹாசனும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். குறிப்பாக செய்தியாளர் சந்திப்பில் கமல் ஒரு புது மனிதராகவே இருந்தார். முகமெல்லாம் மகிழ்ச்சியாக நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தோஷ கமலை பார்க்க முடிந்ததாக பலரும் கருத்து பதிவிட்டனர்.


செய்தியாளர் சந்திப்பின்போது,  நடிகர் கமல்ஹாசனிடம், நிறைய வெற்றிப்படங்கள் உங்கள் நடிப்பில் வெளியாகிருக்கு. ஆனால் விக்ரம் படத்தை மட்டும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், என் நடிப்பில் நிறைய வெற்றிப்படங்கள் வந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை கொண்டாட எனக்கு கேப் கிடைக்கும். தற்போது பல்வேறு மொழிகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் காரணமாகவே கொண்டாடி வருகிறோம் என்றார்.