பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சட்டாவும் காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது குறித்து இருவருமே ஆமோதிக்கவும் இல்லை மறுப்பு சொல்லவும் இல்லை.


கடந்த வாரம் கூட மும்பையில் ஒரு நடசத்திர உணவகத்தில் இருவரும் ஒன்றாக உணவருந்தினர். இருவரும் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது. எத்தனை கிசுகிசு வந்தாலும் இருவரும் மவுனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் பரினீதி சோப்ரா, ராகவ் சட்டாவுக்கு வாழ்த்து சொல்லியுள்ளார் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோரா.


சஞ்சீவ் அரோரா தனது ட்விட்டர் பக்கத்தில், "பரினீதி சோப்ராவுக்கும், ராகவ் சட்டாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்களின் இணைப்பு மகிழ்ச்சியானதாக அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். அவர்கள் என்றென்றும் இணைந்து வாழ வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் பரினீதி சோப்ராவையும், ராகவ் சட்டாவையும் டேக் செய்துள்ளார். இதனால் இலை மறை காய் மறையாக இருந்த பரினீதி, ராகவ் சட்டா காதல் விவகாரம் இப்போது அம்பலமாகியுள்ளது.







 யார் இந்த பரினீதி சோப்ரா? 


மான்செஸ்டர் வணிக பள்ளியில் நிதியியல்,வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற உள்ளார். பரினீதி சோப்ரா துவக்கத்தில் இருந்து வங்கியியல் வேலை பார்க்க விரும்பினார்.பரினீதி சோப்ரா யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பொதுத் தொடர்புகள் ஆலோசகராக பணியாற்றினார். லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகம் ஆனார். லேடீஸ் vs ரிக்கிபால் திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இஸக்‌ஷாதே திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது,(சிறப்பு விருது) பெற்றார். பரினீதி சோப்ராவின் நெருங்கிய நண்பர் ஆதித்யா ராய். பரினீதி சோப்ரா சுமார் 18 விருதுகளை வென்றுள்ளார்.


யார் இந்த ராகவ் சட்டா?


ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சட்டா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். எனினும், டெல்லி தேர்தலிலும் பஞ்சாப் தேர்தலிலும் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர். பகவந்த் மானைப் போலவே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார் ராகவ் சட்டா. அவர் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் அவருக்குப் பல்வேறு பொறுப்புகளை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.