ஐபிஎல் 2023 சீசனானது இன்று முதல் தொடங்குகிரது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 


இந்த போட்டி இன்று தொடங்கியது முதலே சில புதிய விதிகளை போட்டியில் காணலாம். இந்த சீசனில், டி. ஆர்.எஸ், விளையாடும் லெவன்ஸ் மற்றும் இம்பாக்ட் விதி என புதிய விதிகள் களமிறங்குகின்றன. இதன்மூலம் இந்த முறை ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். 


1. டாஸ்க்கு பிறகு விளையாடும் லெவனை அறிவிக்கலாம்: 


கிரிக்கெட்டில் எப்போதும் எந்த 11 பேர் கொண்ட அணி விளையாடுகிறது என்று டாஸ் போடுவதற்கு முன்பு அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த முறை ஐபிஎல்லில் இரு அணிகளின் கேப்டனும், அணி நிர்வாகமும் டாஸ்க்கு பிறகு தனக்கு தேவையான அணியை தேர்வு செய்து கொள்ளலாம். டாஸ்க்கு பிறகு இரு அணி கேப்டன்களும் இரண்டு 11 பேர் கொண்ட பட்டியலை வைத்திருப்பர். ஒரு பட்டியலில் முதல் பந்துவீசினால் அதற்கேற்ப அணியை தேர்வு செய்யலாம். இரண்டாவது பட்டியலில் முதலில் பேட்டிங் செய்தால் இரண்டாவது பட்டியலில் முதலில் பேட்டிங் செய்தால். இந்த இரண்டு பட்டியல்களிலும் தலா 5 பேர் கொண்ட நபர்களை தேர்வு செய்து, அதில் ஏதேனும் ஒரு நபரை இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தலாம். 


2. வைடுக்கும் இனி டி.ஆர்.எஸ்:


இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் அவுட் மற்றும் நாட் அவுட் குறித்த முடிவுகளுக்கு மட்டுமே டி.ஆர்.எஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று தொடங்கும் போட்டி முதல் வைட் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளும் அணிகள் டிஆர்எஸ் எடுக்க முடியும். கடந்த சீசனில், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், நடுவர் நோ-பால் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், தனது அணியின் பேட்ஸ்மேனை வெளியே வரும்படி அழைத்தார். அது பெரும் விவாதமாகவும் மாறியது. இதையடுத்து, நடுவரின் இதுபோன்ற முடிவுகளை டிஆர்எஸ் மூலம் கேப்டனால் தெளிவான முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். 


ஒரு இன்னிஸ்கில் ஒரு அணியால் 2 டி.ஆர்.எஸ் மட்டுமே எடுக்க முடியும். இந்த புதிய விதிக்காக டி.ஆர்.எஸ் அதிகப்படுத்தவில்லை. கிடைக்கும் டிஆர்எஸ்ஸில் இருந்துதான் அணிகள் வைட் மற்றும் நோ-பால் தொடர்பான முடிவுகளில் டிஆர்எஸ் எடுக்க வேண்டும்.


3. இம்பாக்ட் பிளேயர் விதி: 


இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த SA20 லீக்கில் இம்பாக்ட் பிளேயர் விதி பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், இந்த விதி இந்தியன் பிரீமியர் லீக் இன்று முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஒரு இன்னிங்ஸின் 14 ஓவர்கள் முடிவதற்குள், விளையாடும் லெவனில் இருந்து ஒரு வீரரை கேப்டன் வெளியேற்றிவிட்டு, தாங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை அணியில் எடுத்துக்கொள்ளலாம். 14 ஓவர்களுக்குப் பிறகு இந்த விதி பொருந்தாது.


போட்டி குறைவான ஓவர்கள் மற்றும் போட்டியானது 10 ஓவர்களுக்கு குறைவாக இருந்தால், இந்த விதி அமல்படுத்தப்படாது. இந்த விதியை அமல்படுத்த குறைந்தபட்சம் 11 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக இருப்பது அவசியம். ஒரு இம்பெக்ட் வீரராக, பந்து மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட வீரருக்கு கேப்டனால் முன்னுரிமை அளிக்கப்படும்.