Yuvan Shankar Raja on FB : வைரலாகும் யுவன் ஷங்கர் ராஜா ஸ்டேடஸ்.. போற்றப்படும் நேர்த்தியான பதில்கள்..

இணையத்தில் வைரல் ஆகும் ,இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ஹேடர்களுக்கு கொடுத்த பதில் ..

Continues below advertisement

அனைவருக்கும் பிடித்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் என்றும் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு தனியிடம் உண்டு .பொதுவாக 90-ஸ் கிட்ஸ் ரஹ்மானுக்கு பிறகு அதிகம் ட்ரெண்ட் செய்தது யுவனின் பாடல்கள்தான் . மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே . யுவன்ஷங்கர் ராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்ப இஸ்லாம் மதத்திற்கு மாறி பின்பு அதே மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணமும் செய்து கொண்டார் .

Continues below advertisement

இந்நிலையில் , ரமலான் நோன்பை முன்னிட்டு தனது  பக்கத்தில் குரான் வாக்கியத்தை ஒன்றை பதிவு செய்திருந்தார் .இதனை அடுத்து பல ஹேட்டர்ஸ் அவரின் பேஸ்புக் போஸ்டில் கமெண்ட் செய்ய தொடங்கினார்கள். ஹிந்து எப்படி இவ்வாறாக செய்யலாம் என்று மிகவும் கடுமையான விமர்சனங்களை அந்த பக்கத்தில் வைக்கப்பட்டன. ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் யுவன் மிகவும் நேர்த்தியாக பதில் அளித்துள்ளார் .




மதம் மாறுவது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் , நான் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. எனது தேவை எதுவோ அதை நான் செய்து உள்ளேன், பிரபலங்கள் என்பவர்கள் தனிப்பட்ட மனிதர்கள், நான் யாரையும் மதம் மாற கூறவில்லை யாரையும் தவறான பாதைக்கு அழைத்து சென்றதும் இல்லை . எனது இசையை வைத்து பலரின் இதயங்களில் இடம் பிடித்துள்ளேன் இந்த தருணத்தில் எல்லாம் வல்ல அல்லா 
அல்ஹம்துலில்லாஹ்  எனது நன்றி !!! 

”என்னை ஆன்லைனில் பின்பற்ற வேண்டாம் என்று நினைப்பவர்கள் தாராளமாக செல்லலாம். எனது உண்மையான ரசிகர்கள் எப்பொழுதும் என்னுடன் இருப்பார்கள்" என்று அனைத்து ஹேட்டர்களுக்கு தகுந்த ரிப்ளை கொடுத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா 

Continues below advertisement
Sponsored Links by Taboola