நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் மருத்துவமனையில் படுக்கைவசதித் தட்டுப்பாடு கட்டுப்படுத்தமுடியாத நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டப் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்த வரிசையில் சிங்கப்பூர் அரசு இந்தியாவுக்கு 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பிவைத்துள்ளது. ஆக்சிஜன் சிலண்டர்களைத் தாங்கிய சிங்கப்பூர் விமானப்படையின் சி-130 ரக விமானங்கள் இரண்டை அந்த நாட்டு அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.