கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் 3ல்1 நபருக்கு மனநலன் பாதிப்புகள் ஏற்படுவதாக அரசு புள்ளி விவரங்களின் வழி தெரியவருகிறது. இந்தப் பேரிடர் காலத்தில் மனநலனைப் பாதுகாத்துக்கொள்ள உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றம் தேவை என்கிறார் இந்திய டயட்டிக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் ஜக்மீத் மதன். நமது அன்றாட சாப்பாட்டில் கட்டாயம் இருக்கவேண்டிய 5 உணவு வகைகளை அவர் பட்டியலிடுகிறார்.
- பழங்கள்
பழங்களில் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் இருப்பதால் அவை எதிர்ப்புசக்தியை அதிகரிக்கின்றன. செல்கள் அளவிலான பாதிப்புகளைச் செய்கின்றன.தினமும் எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
- பச்சைக்காய்கறிகள்
காய்கறிகள், குறிப்பாக கேரட், வள்ளிக்கிழங்கு போன்றவை உடலில் செரட்டோனின் சுரப்பை அதிகரிக்கும். அதனால் கோபம் அழுகை போன்ற அதீத உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
- கீரைகள்
புதினா, முட்டைக்கோஸ் போன்ற பச்சைக்கீரை வகைகளில் மெக்னீஷியம் தாது உள்ளது. மேலும் உடலில் டோபமைன் மற்றும் செரடோனின் சுரப்பை இது அதிகப்படுத்துவதால் மனது மகிழ்ச்சியான உணர்வு நிலையிலேயே இருக்கும்.
- வெண்கடலை
வெண்கடலையில் புரதம் வைட்டமின் மினரல் அதிகம் உள்ளன.இதனால் மூளையின் ஆரோக்கியத்தை இது பாதுகாக்கின்றது.
- நட்ஸ் வகைகள்
பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றில் ஒமேகா வகைக் கொழுப்புகள் உள்ளன. இவை உடலின் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.