ஈத் பெருநாள் ,அன்று  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் ஆகியோர் "தலா அல் பத்ரு அலேனா "என்ற தலைப்பில் ஒரு நஷீத் / இஸ்லாமிய இண்டி பாடல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர் .




இந்த பாடல், மிக்ஸிங் மற்றும் ட்ராக் போன்றவற்றை  யுவன் சங்கர் ராஜா செய்துள்ளார், அவர் அமீனுடன் சேர்ந்து ட்ராக் பாடியுள்ளார். இந்த பாடலின் தமிழ் வரிகளை ஜாஃப்ரூன் நிசார் எழுதியுள்ளார்.  அரபு வரிகளை பீப்பிள் ஆஃப் மதீனா (நபிகள் நாயகம்) எழுதி இருக்கிறார். தலா அல் பத்ரு அலேனா ஒரு பாரம்பரிய இஸ்லாமிய கவிதை, இது இஸ்லாமிய வரலாற்றின் வேர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ,.


தலா அல் பத்ரு அலாய்னா' எனும் இந்தப்பாடல் மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது மக்களால் பாடப்பட்டது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இந்தப்பாடல் மிகவும் புகழ் பெற்றது. 





யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலை பற்றி கூறுகையில் , “எனது சகோதரர் ஏ.ஆர். அமீன் முதல் முறையாக, அதுவும் தலா அல் பத்ரு அலேனா போன்ற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பாடலை படி இருக்கிறார் . ஈத் நாளான இன்று இந்த அழகான சந்தர்ப்பத்தில்  இந்த பாடல்  வெளியிடப்பட்டிருப்பது பெரும்  மகிழ்ச்சியை அளிக்கிறது . இது பகிர்வுக்கான  பண்டிகை. இனி இந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை மற்றும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும் ” என்று கூறினார் .





ஏ.ஆர். அமீன் தனது சமூக வலைத்தளத்தில் , “இந்த தெய்வீக பாதையில் சகோதரர் யுவனுடன் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் தருகிறது. ஈத் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவரட்டும்." என்று பதிவிட்டு இருந்தார் .




யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மானிடம் மரியான் படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார் என்பது நாம் அறிந்ததே . இளையராஜா -ரஹ்மான் தொடங்கி தற்பொழுது அடுத்த தலைமுறையினரும் இசையில் இணைந்து பணிபுரிவது பெரும் மகிழ்ச்சியை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது .


இன்னும் பல இசைப்பாளர்கள் மற்ற இசையமைப்பாளர்கள் படங்களில் படி வருகிறார்கள் . யுவன் இசையில் அமீன் திரைத்துறையில் ஒரு பாடல் பட வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் . இவர்களின் இந்த உதவும் பண்பு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது