சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி சவுந்தர்யா. பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவார். இவருக்கு சமூக வலைதளத்தில் நிறைய ரசிகர்கள் உண்டு. பொதுவாகவே பிரபலங்களுடன் அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் உரையாடுவது வழக்கம். அது சில நேரம் சுவாரஸ்யமாக இருக்கும். பல நேரம் சர்சையாகவும் முடியும். அப்படி நிலை தான் தற்போது சவுந்தர்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. 




அவரது இன்ஸ்டா பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி ஷாட் செய்த ரசிகர் ஒருவர், அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்த நபர், படுக்கை அறைக்கு வருமாறு சவுந்தர்யாவை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர்யா, அந்த நபரை எச்சரித்துள்ளார். ஆனாலும் சம்மந்தப்பட்ட நபர் தொடர்ந்து ஆபாச ஷாட்டை தொடர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனே அந்த நபரின் கணக்கை பிளாக் செய்த சவுந்தர்யா, சம்மந்தப்பட்ட நபரின் விபரங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமின்றி அவர் சவுந்தர்யாவிற்கு அனுப்பிய ஆபாச தகவலின் ஸ்கிரீன் ஷாட்டையும் அத்துடன் இணைத்து பதிவிட்டார். தனக்கு இது போன்ற பாதுகாப்பை தந்த இன்ஸ்டாவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். 




சவுந்தர்யாவின் இந்த தகவலை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், பலர் அவரை பாராட்டி வருகின்றனர். பெண்ணாக துணிந்து ரோமியோவை சமாளித்ததுடன், அவனது முகத்திரையை கிழித்ததற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் பலருக்கும் இது போன்ற பாலியல் மிரட்டல்கள் வருவதும், சிலர் அதை கண்டுகொள்ளாமல் கடந்து போவதும், பலரும் பயந்து வெளியே சொல்லாமல் விலகுவதும் வாடிக்கையாக நடப்பது தான். ஆனால் சவுமியா அதிலிருந்து விலகி, துணிச்சலாக பெண்ணாக தனக்கு எதிரான ஆபாச தொல்லையை வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார்.