நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தற்கொலை எண்ணங்கள் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் பன்முக தன்மை கொண்ட பிரபலங்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என படிப்படியாக வளர்ந்த அவரின் பயணம் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று (செப்டம்பர் 19) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


16 வயதான மீரா, ஆயிரம் விளக்கில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் குழந்தைகள் பற்றி கடந்த சில மாதங்களுக்கு நேர்காணலில் நெகிழ்ச்சியாகவும் பேசியிருந்தார். இப்படியான நிலையில் சிறுவயதில் தன் தந்தையின் தற்கொலையால் வெகுவாக பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி எங்கு சென்றாலும் தற்கொலை தடுப்பு தொடர்பான விஷயங்கள் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துவார். 


அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றிலும் தற்கொலை எண்ணங்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து பேசியிருந்தார். அதில், “தற்கொலை எண்ணங்கள் நிறைய பேருக்கு வருதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். அது பணம் தொடர்பான அழுத்தத்தால் வருகிறது. அளவுக்கதிகமான திட்டமிடல்கள், நம்பிக்கையுடன் பணம் கொடுத்து ஏமாறுவது என அதற்கான காரணமாக இருக்குது. அதேசமயம் பள்ளிகளில் படிக்கும் சிறு வயதினருக்கு படிப்பினால் ஏற்படும் அழுத்தத்தினால் அத்தகைய எண்ணங்கள் ஏற்படுகிறது. நாமளும் என்ன செய்கிறோம். ஏற்கனவே பள்ளியில் படித்து விட்டு வீட்டுக்கு வருபவர்களை, டியூஷன் போ என பொழுது அன்னைக்கும் அவர்களை சிந்திக்க நேரம் கொடுக்காமல் இயந்திரமாக தான் மாற்ற முயற்சிக்கிறோம். அப்படி வரக்கூடாது. அதுக்கு சுற்றியிருப்பவர்களை பெற்றோர்கள் மிக முக்கிய காரணமா இருக்காங்க. பசங்களை ஃப்ரீயா விட்டுடுங்க. 


இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வருகிறது என்றால், பிறரின் அன்பையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து கொண்டு இருக்காதீங்க. உங்களை நீங்களே நேசியுங்கள் என விஜய் ஆண்டனி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை, நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)