பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-ன் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இதை வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் பகிந்து வருகின்றனர்.


தமிழ் திரையுலகில் ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் மென்னிசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. இவர் ரசிகர்களுடன் டிவிட்டரில் அவ்வபோது உரையாடுவது வழக்கம். கேள்வி - பதில் உரையாடல் மூலம் டிவிட்டரில் ஆக்டிவாக இருப்பவர்தான். தனது டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


ஹாரிஸ் ஜெயராஜ் ஃபேஸ்பு பதிவின் விவரம்


நண்பர்களே, எனது டிவிட்டர் அக்கவுண்ட் கடந்த இரண்டு நாட்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. சரி செய்யப்பட்டவுட மீண்டும் வருகிறேன். இணைந்திருக்கலாம். ஹேவ் அ குட் டே!




ஹாரிஸ் ஜெயராஜ்-ன் இந்த டிவீட்டை அனைவரும் சமூக வலைதளத்தில் பகிந்து வருகின்றனர். 


மின்னலே படத்தின் ஒவ்வொரு பாடலும் மனதில் இப்போது வரை இனிமையாக இருக்கிறது.
மஜ்னு, 12 பி என அடுத்தடுத்து ஹிட் பாடல்களாக ரசிகர்களை இசையால் தெறிக்க விட்ட ஹாரிஸ் ஜெயராஜ் இசை துறைக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம். மெலடி பாடல்களின் இலக்கணத்தை எந்த அளவிற்கு வெளிப்படுத்தினரோ அதே அளவிற்கு தர லோக்கலாக இறங்கியும் என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதை சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓடி போய் கல்யாணம் தான்...' பாடல் மூலம் நிரூபித்து காட்டினார். கிராமிய ஸ்டைல் பாடல்களையும் ஒரு கைபார்த்தவர். இவரின் முழுமையான திறமையை இந்த தமிழ் சினிமா அப்படியே கிரகித்து கொண்டது. அப்படி ஹாரிஸ் ஜெயராஜ் இசை பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்த திரைப்படம் 'காக்க காக்க'. 


அறிமுக படமே சூப்பர் ஹிட். அடுத்தடுத்து இவர் இசையமைத்த படங்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், எங்கேயும் சறுக்காமல் தொடர்ந்து மக்கள் ரசிக்கும் இசையை தந்து கொண்டிருந்தார். மின்னலே வெளியானதில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஹாரிஸின் பெரும்பாலான பாடல்களே ரிங்டோன்களாகவும், காலர் ட்யூன்களாகவும் செல்போன் புரட்சியில் பங்கெடுத்தன. அந்த ரிங்டோனகளை இப்போதும் ஆங்காங்கே கேட்க முடியும். அதில், ’ஜூன் போனால் ஜூலை காற்றே’ அப்போதே வைரல் ரகம்!


ஹாரிஸ் - கார்த்திக், ஹாரிஸ் - கெளதம் வாசுதேவ், ஹாரிஸ் - தாமரை, ஹாரிஸ் - ஹரிஹரன் என நிறைய காம்போக்கள் ஹிட் . ஆனால், ஹாரிஸ் - ஜீவா காம்போ மறக்க முடியாத ஒன்று! ஹாரிஸின் இசை பயணம் ‘peak’ல் இருந்தபோது  அவர் ஜீவாவோடு பணியாற்றி இசையமைத்த ஆல்பங்கள் தனித்துவமாக இருக்கும். ரசிகர்கள் அதிகம் மிஸ் செய்யும் காம்போவும் இதுதான்.. ச்சே.. இன்னும் நிறைய பாடல்கள் இவர்கள் காம்போவில் வந்திருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஏக்கமாக இருக்கும்.


இளையராஜா காலம், ஏ.ஆர் ரஹ்மான் காலமென்று இருக்குமெனில், நிச்சயம் ஹாரிஸ் காலம் என சொல்லும்படியான ஒரு இசை காலத்தை தனக்கென உருவாக்கி கொண்டு, ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றிருக்கிறார் என்பதை தவிர்க்க முடியாது!




மேலும் வாசிக்க. 


HBD Harris Jayaraj : விழி மூடி யோசித்தால்... நினைவுகளில் ஊஞ்சலாடும் சுகமான பாடல்கள்... மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் இன்று