தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அஜித்திற்கு ஐகானிக் இசை:
இந்த படத்திற்கு முதலில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தமான நிலையில், பின்னர் ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குட் பேட் அக்லி குறித்து ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, கண்டிப்பா நல்ல இசை இருக்கும். தனித்துவமாக ஒரு இசை இருக்கும்.
விஜய் சார்னா தெறி, தனுஷ் சார்னா அசுரன், அஜித் சார்னா ஐகானிக்கா என்னோட பெஸ்ட். அவருக்கு தனித்துவமாக நிறைய இருக்கு. என்னோட தரப்பில இருந்து கண்டிப்பா 100 சதவீத உழைப்பை கொடுக்கனும்னு நினைக்குறேன். அது நல்ல உழைப்போட வந்து சேரும்.
மாஸ்க்கு எல்லாம் மாஸ்:
கிரீடம் ஒரு மாஸ் படம் கிடையாது. அது உணர்வூப்பூர்வமான படம். அதுல அக்கம் பக்கம், விழியில் உன் விழியில், கனவெல்லாம் பலிக்குதே-னு கிளாசிக்கா இருக்கும். நான் ஒரு பீட் போட்ருந்தேன் மாஸ்க்கு எல்லாம் மாஸ் அந்த மாதிரி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
18 வருடங்களுக்கு பிறகு:
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஒரு ஆக்ஷன் காமெடி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்காக அஜித் உடல் எடை இளைத்து நடித்துள்ளார். அவரது கெட்டப் ஏற்கனவே இணையத்தில் ரிலீசாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்துடன் பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் அஜித் நடிப்பில் கிரீடம் மட்டுமே உருவாகியுள்ளது.
அதன் பின்னர், அவர் பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தாலும் அஜித்திற்கு இசையமைக்கவில்லை. இந்த நிலையில், 18 வருடங்களுக்குப் பிறகு அஜித் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.