லால் சலாம்:
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salam). ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.
ரஜினியைப் புகழ்ந்து தள்ளிய ரஹ்மான்:
அதன்படி, ”லால் சலாம் படத்தின் கதையை முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னார். கதையை கேட்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. மேலும், லால் சலாம் படத்தின் கதை நல்நெறிகளை போதிக்கும் வகையில் இருந்ததால் பயந்தேன். படத்தை பார்த்தவுடன் எந்த இடத்தில் எல்லாம் சலிப்பா இருக்கும். என்று நினைத்தேனோ, அதெல்லாம் அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது.
இந்த படத்தை பார்த்தவுடன் யார் வசனம் எழுந்தியது? என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அதற்கு நான் (ஐஸ்வர்யா) படத்திற்கு வசனம் எழுதினேன். அப்பா (ரஜினிகாந்த்) கொஞ்சம் மாற்றங்கள் செய்தார் என்று கூறினார். அப்போவே புரிந்தது, அவரது ஞானம் என்று உணர்ந்தேன். அனைத்தையும் மதித்து நடப்பதால், நன்கு ஆராய்ந்து பல அரிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.
"சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பது கடினம்"
இந்த படத்திற்கு நான் வேலை பார்த்தது எனக்கு நன்றாக இருந்தது. ரஜினிகாந்த் 70's-களில் ஒரு ஸ்டைல் உருவாக்கியிருக்கிறார். அது தான் தற்போது வரை தொடர்கிறது. எல்லாரும் சொல்கின்ற மாதிரி நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
நான் ஒவ்வொரு நிலம் வாங்கும்போதும், 'மண்ணின் மீது மனிதருக்கு ஆசை; மனிதன் மீது மண்ணிற்கு ஆசை' என்ற பாடல் தான் நினைவுக்கு வரும்” என்றார். தொடர்ந்து ஐஸ்வர்யா பற்றி பேசிய அவர், ”சூப்பர் ஸ்டாரின் மகள். அவருடைய மகளாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள்.
நடனம், திரைப்படம் தயாரிப்பது, ஆடைகளை அணிவது போன்றவற்றால் நீங்கள் விமர்சிக்கப்படுகிறீர்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள்" என்று கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மேலும் படிக்க