பிரபல இசையமைப்பாளரான அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அனிருத், “ 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போது இதை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்று எனக்குத் தோன்றியது. ஏப்ரல் 13 லிருந்து ஜூன் வரையிலான இந்த காலக்கட்டத்தில் எனது இசையில் நான்கு படங்கள் வெளியாகியிருக்கின்றன. ‘பீஸ்ட்டில் ஆரம்பித்த பயணம் கேஆர்கே, டான், விக்ரம் என தொடர்ந்திருக்கிறது.
இந்தப்படங்களில் இடம் பெற்ற இசை மீது நீங்கள் காட்டிய அன்புதான் எங்களை இதை செய்ய வைத்திருக்கிறது. என்னுடைய இசைக்குழுவும், இசைக்கலைஞர்களும் இல்லாமல் இதை என்னால் நிச்சயம் செய்திருக்க முடியாது. நாளை விக்ரம் படம் வெளியாக உள்ளது. மகிழ்ச்சியாக வேலை செய்திருக்கிறோம். நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.
ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் மே 11ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பாடி அசத்தி இருந்தார்.