அதிக போட்டி நிலவும் இந்தி   பயணிகள் வாகன சந்தையில் (Indian passenger vehicle market) நம்பர் 2 இடத்திற்கான போட்டி சூடுபிடித்துள்ளது.


 ஹூண்டாயை பின்னுக்கு தள்ளிய டாடா:


டாடா மோட்டார்ஸ், அதன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை 43341 அலகுகளாக பதிவு செய்துள்ளது. சந்தையில் வலுவான தேவை மற்றும் ஒப்பீட்டளவில் சிறந்த செமிகண்டக்டர் சோர்ஸ் ஆகியவற்றை வைத்து பார்க்கும் பொழுது. டாடா மோட்டார்ஸ் NSE -1.77%   அளவில் உள்ளது. இதன் மூலம்  சிறு வித்தியாசத்தில் ஹூண்டாய் மோட்டார் அதிக போட்டித்தன்மை கொண்ட இந்திய பயணிகள் வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.




காரணம் என்ன?


இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மாதாந்திர விற்பனையில் 42293 யூனிட்களை விற்றது ஹூண்டாய் மோட்டார்ஸ்.  ஆனால் கடந்த  ஆறு மாதங்களில் தென் கொரிய போட்டியாளரை டாடா மோட்டார்ஸ் முந்தியுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறையாகும். ஹூண்டாய்க்கு முன்னால் டாடா மோட்டார்ஸ் பந்தயத்தில் முந்த காரணம் அந்த மாதத்தில் ஹூண்டாய் மேற்கொண்ட பராமரிப்பு பணிநிறுத்தம் என்கின்றனர் வல்லுநர்கள். இருந்தாலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இழந்த உற்பத்தியை ஹூண்டாய் நிச்சயம் பெறும் என்றும் semiconductors உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 


டாட்டா மோட்டார்ஸ் அறிக்கை:


ஒட்டுமொத்தமாக இதுவரையில் 2022  ஆண்டிற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த விற்பனையில், டாடா மோட்டார்ஸ் ஹூண்டாய் மோட்டாரை விட   10000 முதல் 11000 யூனிட்கள் பின்தங்கி உள்ளது. ஜனவரி முதல் மே வரை, ஹூண்டாய் மோட்டார் இந்தியா 218966 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, டாடா மோட்டார்ஸ் 207979 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ்  வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் , நிறுவனம் தொடக்கத்தில் இருந்து இதுவரை இல்லாத  அளவிற்கு அதிகபட்ச மாதாந்திர விற்பனையான 43,341 யூனிட்களை- PV மற்றும் EV உடன் இணைந்து வழங்கியுள்ளது. இது நெக்ஸான் மற்றும் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றின் மாதாந்திர விற்பனை மூலம் பெற்றதாகும் என கூறியுள்ளது.




ஹூண்டாய் அறிக்கை:


சென்னையில் உள்ள இரண்டு HMI ஆலைகளும் திட்டமிடப்பட்ட இரு வருட பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டது. இதனால் மாதத்தில் 6 நாட்களுக்கு (மே 16 முதல் மே 21 வரை) உற்பத்தி இல்லை. இது மே மாதத்தில் வாகனம் கிடைப்பதைக் குறைத்தது, இது மே மாத விற்பனை எண்ணிக்கையை (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) பாதித்தது என ஹூண்டாய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது


 


Car loan Information:

Calculate Car Loan EMI