தமிழ் சீரியல் உலகில் தன் பேச்சுகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடம் குட்டு வாங்கி வருபவர் நடிகை ஸ்ரீநிதி.


இவர் முதலில் விஜய் டிவியில்  7சி சீரியலின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ’யாரடி நீ மோகினி’, ’புதுப்புது அர்த்தங்கள்’ போன்ற தொடர்களில் நடித்து தமிழ் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். ஆனால், தன் சமூக வலைதளக் கருத்துக்களால் தொடர்ந்து ஸ்ரீநிதி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.




வலிமை நல்லா இல்லை...


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், முன்னதாக வலிமை படம் குறித்து விமர்சித்து அஜித் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.


சிம்பு வீட்டு முன் போராட்டம்


தொடர்ந்து நடிகர் சிம்பு குறித்து பதிவிட்ட ஸ்ரீநிதி, ”அனைவருக்கும் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் எப்போதும் சிங்கிளாக இருப்போம்” என தன்னை சிம்புவுடன் ஒப்பிட்டு பதிவிட்டிருந்தார்.


அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடிகர் சிம்பு தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகக் கோரி அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினார். இச்சம்பவம் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் போராட்டம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகின. 


தொடர்ந்து முன்னதாக சின்னத்திரை நடிகை நட்சத்திரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஸ்ரீநிதி பதிவிட்டிருந்தார்.


’என் கதை பேசும்’


இந்நிலையில், தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுத்துப்பிழையுடன் கூடிய தமிழ் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


 






அதில், “நான் இனி பேசவில்லை, என் கதை பேசும்” என எழுத்துப் பிழையுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ஸ்ரீநிதியின் நடவடிக்கைகளால் ஏற்கெனவே கடுப்பான ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.


மேலும், முதலில் தமிழை சரியாகக் கற்றுக்கொண்டு வருமாறும், பிறகு கதை பேசுவதை பார்க்கிறோம் என்றும் ரசிகர்கள் அவரைக் கலாய்த்துப் பதிவிட்டு வருகின்றனர்.