ஏ ஆர் ரஹ்மான்
இசயமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மலேசியாவின் வரும் ஜூலை 27 ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இதற்கு முன்னதாக தனது ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கடந்த ஜூலை 8 ஆம் தேதி மலேசியா கிளம்பிச் சென்றார். இந்த நிகழ்வில் சுமார் 1500 ரசிகர்களை ரஹ்மான் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தார்.
மலேசிய கலாச்சாரத்தின் மேல் தனக்கு இருக்கும் பெருமதிப்பை ரஹ்மான் தெரிவித்து அன்வர் இப்ராஹிமுக்கு மலர்ச் செண்டை வழங்கினார். மேலும் இந்தியா மற்றும் மலேசிய ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் கலாச்சார ரீதியான பரிமாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
அதே நேரம் மலேசிய பிரதமர் இப்ராஹிம் ரஹ்மானை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் ‘இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகரான ஏ ஆர் ரஹ்மானை சந்தித்தேன். நாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச இசைக் கலாச்சாரத்தைப் பற்றி பேசினோம். தான் இப்போது சூஃபி இசையை ஆராய்ச்சி செய்து வருவதாக ரஹ்மான் தெரிவித்தார். இவை தவிர்த்து தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் இசைத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்தும் நாங்கள் உரையாடினோம்.
ராயன்
ஏ. ஆர் ரஹ்மான் தற்போது தனுஷின் ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இது தவித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் Headhunting to Beatboxing என்கிற நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார் ரஹ்மான்.
மேலும் படிக்க ; Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?
Watch Video : இது புதுசா இருக்கே! திருமணம் முடிந்து 1 மாதம் முடிந்ததை கொண்டாடும் பிரேம்ஜி..