பவதாரிணி
இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி காலமான செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை மிகப்பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தபோது சிகிச்சைக்கு முன்பாகவே மாரடைப்பால் உயிரிழந்தார். இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரது உடல் தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா
பவதாரிணி இறப்பதற்கு முன் கடைசியாக இசையமைத்த படம் புயலில் ஒரு தோணி. புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங் ஆகியோர் புயலில் ஒரு தோணி படத்தில் நடித்துள்ளார்கள். ஈசன் இப்படத்தை இயக்கியுள்ளார். பவதாரிணி மறைந்து ஒரு வருடம் காலம் கடந்துள்ள நிலையில் புயலிலே ஒரு தோணி படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைபபாளர் இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா கலந்துகொண்டார்கள். பவதாரிணி பாடிய பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்டன. அப்போது கார்த்திக் ராஜா மேடையில் கண் கலங்கினார். மேலும் இதே நிகழ்ச்சியில் இளையராஜா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பெண் பாடகர்களை மட்டும் கொண்ட ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்பதே பவதாரிணியின் கடை ஆசை. அதனால் 15 வயதிற்குட்பட்ட பெண்களை கொண்ட இசைக்குழு ஒன்றை உருவாக்க இருப்பதாகவும் உலகம் முழுவதும் இதற்கான ஆட்களை தேட இருப்பதாகவும் இளையராஜா அறிவித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்த விடுதலை 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் பாடல்களும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. அடுத்தபடியாக சிம்பனி ஒன்றை தானே எழுதி இசையமைத்துள்ளார் இளையராஜா.
மேலும் படிக்க : Ilaiyaraja : எத்தனை பங்களா உள்ளது..? நீதிமன்றத்தின் கேள்விக்கு இளையராஜா நெத்தியடி பதில்
சாய் பல்லவிக்கு அதிர்ந்த அரங்கம்..ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் , ராஷ்மிகா