சாய் பல்லவி

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தமிழ் , இந்தி , மலையாளர், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். தமிழில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பும் மதிப்பும் இருந்து வருகிறது. மற்ற நடிகைகளை சினிமா தவிர்த்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்துவரும் சூழலில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வழியாக மட்டுமே ரசிகர்களின் மதிப்பை பெற்றவர் சாய் பல்லவி. சினிமா தவிர்த்து தனது குடும்பத்துடன் நேரம் செலவிடும் சாய் பல்லவி அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதில் பெரிதாக விருப்பம் காட்டுவதில்லை. 

அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டாடும் சாய் பல்லவி

சாய் பல்லவி நடித்து கடந்த ஆண்டு வெளியான அமர்ன திரைப்படம் பான் இந்திய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான தண்டேல் திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. அடுத்தபடியாக இந்தியில் ரன்பீர் கபூர் உடன் இணைந்து ராமாயணா படத்தில் நடித்து வருகிறார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு சாய் பல்லவி தெலுங்கு படம் ஒன்றில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில்  புஷ்பா பட இயக்குநர் சுகுமார் ஒவ்வொருவராக அழைத்து அவர்களைப் பாராட்டினார். கீர்த்தி சுரேஷ் , ராஷ்மிகாவைத் தொடர்ந்து சாய் பல்லவியின் பெயரை அவர் சொன்னதும் ரசிகர்கள் ஆர்வாரம் செய்து அந்த அரங்கத்தையே அலற வைத்துள்ளார்கள். சாய் பல்லவிக்கு எழும் சத்தத்தைக் கேட்ட மற்ற இரு நடிகைகளும் அமைதியாக ஒதுங்கி நிற்கும் இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த சத்தத்தைக் கேட்ட புஷ்பா 2 இயக்குநர் ' நீங்கள் தான் பெண் பவன் கல்யாண்' என சாய் பல்லவியை புகழ்ந்தார்.