குட் பேட் அக்லி


அஜித் குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்தார். தற்போது டி.எஸ்.பி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்தின் புது இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய த்ரிஷா இல்லனா நயன்தாரா , மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய இரு படங்களுக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இரண்டு படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றன. மேலும் சமீபத்தில் ஜி.வி இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.