இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெர்த் டெஸ்ட் போட்டியில் தனது 30வது சதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். இதன் மூலம் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 7வது டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.


டெஸ்டில் 30 வது சதம்:


ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் நட்சத்திர இந்திய பேட்டர் விராட் கோலி புதிய வரலாற்றை எழுதினார். ஆப்டஸ் மைதானத்தில் 143 பந்துகளில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது 7வது டெஸ்ட் சதத்தை எட்டினார் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி. இதற்கு முன்னால் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆறு சதங்கள் அடித்தார். ஏழு சதங்களுடன், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதம் அடித்த ஜாக் ஹாப்ஸுக்கு அடுத்தபடியாக விராட் கோலி உள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அனைத்து வடிவ போட்டிகளிலும்  அதிக சதம் அடித்த வெளிநாட்டு பேட்டர் என்ற  சாதனையையும் படைத்தார் கோலி.


என் மனைவி தான் காரணம்:


என் கூடவே அனுஷ்கா என் பக்கத்தில் இருந்திருக்கிறார். திரைக்குப் பின்னால் நடக்கும் அனைத்தும் அவளுக்குத் தெரியும். நீங்கள் சிறப்பாக செயல்படாதபோது உங்கள் தலையில் என்ன  நடக்கிறது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் அதற்காக ஒரே இடத்தில் சுற்றித்திரியும் ஆள் அல்ல. நாட்டிற்காக செயல்படுவதில் பெருமை கொள்கிறேன். சதம் அடித்து பெவிலியன் நோக்கி கோலி செல்லும் போது தனது மனைவி அனுஷ்காவை பார்த்து விராட் கோலி ஃபிளையிங் கிஸ் கொடுத்து சென்றார். 



தடுமாறும் ஆஸ்திரேலியா: 


இந்திய அணி 481 ரன்கள் குவித்து 526 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்க்கு இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இதன் பிறகு தனது  இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா போட்டி முடிய அரை மணி நேரத்திற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதில் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், மார்னஸ் லபுசென் ஆகியோரும் அடங்குவர். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியே அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை முடிவடைந்தது.