அனிருத்


தமிழ் , இந்தி , தெலுங்கு என தென் இந்திய சினிமாக்களில் ராக்ஸ்டார் என்கிற அடைமொழியோடு வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத். இந்தியின் ஜவான் , தெலுங்கில் தேவரா , தமிழில் இந்தியன் 2 , வேட்டையன் , விடாமுயறி , கூலி என அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இசையில் சமீபத்தில் வெளியாகிய இந்தியன் 2 படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்துள்ளன.


இசையமைப்பாளராக பிரபலமாக அறியப்படும் அனிருத் தற்போது சினிமா தவிர்த்து மற்ற தொழில்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனமான வி.எஸ் மணி & கோ என்கிற காஃபி மற்றும்  உணவு பண்ட நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார் அனிருத்.


ஃபில்டர் காப்பி கடை தொடங்கிய அனிருத் 






ஜி டி பிரசாத் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் வி.எஸ் மணி காஃபி & ஸ்னாக்ஸ். சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது தாத்தா பாட்டியின் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட ஃபில்டர் காஃபி மற்றும் உணவுப் பண்டங்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தம் ஆனார். 


பிராண்டை விளம்பரப்படுத்துவதுடன் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் அனிருத் பொறுப்பேற்று இருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் அனிருத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வழக்கமாக நெல்சன் படங்களில் வரும் பாடல்களுக்கு வரும் ப்ரோமோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நெல்சன் பாணியில் இந்த காஃபி நிறுவனத்திற்கான ப்ரோமோவை அனிருத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். வி.எஸ் மணி. அனிருத்தின் இந்த புதிய தொடக்கத்திற்கு அவரது ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


இந்தியன் 2


அனிருத் இசையமைத்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கி கமல் , காஜல் அகர்வால் , பாபி சிம்ஹா , எஸ்.ஜே,சூர்யா , சித்தார்த் , பிரியா பவாணி சங்கர் , ரகுல் ப்ரீத் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது