Mini Countryman electric SUV: மினி நிறுவனத்தின் புதிய மின்சார எஸ்யுவி கார் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியடதை அடுத்து, அதன் விநியோகம் அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ட்ரிமேன் மின்சார எஸ்யுவி:
மினி இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வரவிருக்கும், ஆல் நியூஎலெக்ட்ரிக் கன்ட்ரிமேனுக்கான முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் புதிய மின்சார வாகனம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூ கண்ட்ரிமேன், எலெக்ட்ரிக் பிஎம்டபிள்யூ iX1 உடன் தனது ஃபிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது.
மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக்: தளம், வெளிப்புறம், உட்புறம்:
மினி கண்ட்ரிமேன் இதுவரை இந்தியாவில் பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் பிஎம்டபிள்யூ iX1 உடன் தனது ஃபிளாட்ஃபார்மை பகிர்ந்து கொள்கிறது. புதிய மின்சார கண்ட்ரிமேன் விற்பனைக்கு வந்ததும், அது பிஎம்டபிள்யூ iX1 மாடலின் போட்டியாளர்களில் ஒன்றாக இருக்கும்.
புதிய மினி கன்ட்ரிமேனுக்கான மாற்றங்கள் புதிய கூப்பரைப் போலவே உள்ளன. எண்கோண முகப்பு கிரில் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட்கள் மற்றும் டெயில்-லைட்டுகள் போன்றவை ஒரே மாதிரியாக உள்ளன. உட்புற அம்சங்கள் குறைந்தபட்ச தோற்றத்தைக் கொண்டுள்ளன. டாஷ்போர்டில் வட்டமான தொடுதிரை ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கூப்பர் எஸ் போலவே, கன்ட்ரிமேனில் உள்ள கியர் செலக்டரும் இன்ஃபோடெயின்மென்ட்டின் கீழே உள்ள பேனலில், ஹேண்ட்பிரேக் பட்டன், டர்ன்-கீ ஸ்டார்டர், டிரைவிங் மோட் செலக்டர் மற்றும் ஆடியோ-கண்ட்ரோல் டயல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் ADAS அம்சங்கள், காரில் கேமரா, டிரைவருக்கான மசாஜ் அம்சத்துடன் கூடிய அட்ஜெஸ்டபள் மின்சார இருக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகின்றன.
மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் - பவர்டிரெய்ன்
மினியின் புதிய முழுமையான எலெக்ட்ரிக் கண்ட்ரிமேன் ஆனது இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் வருகிறது. ஒன்று, ஒற்றை-மோட்டார், 204hp மற்றும் 250Nm உடன் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம், மற்றொன்று 313hp மற்றும் 494Nm உடன் இரட்டை-மோட்டார், ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கிறது. இந்த இரண்டு எடிஷன்களில் எது இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இரண்டும் 66.45kWh பேட்டரியைக் கொண்டுள்ளன. முறையே 462km மற்றும் 433km அதிகாரப்பூர்வ வரம்புகளை வழங்குகின்றன.
விலை விவரங்கள்:
பெட்ரோலில் இயங்கும் மினி கண்ட்ரிமேன் தற்போது ரூ. 48.10 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்), இருப்பினும், இந்தியாவிற்கு வரும்போது முழுமையான எலக்ட்ரிக் நியூ-ஜென் அதிக விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது BMW iX1, Volvo XC40 Recharge, Hyundai Ioniq 5 மற்றும் Kia EV6 போன்ற மின்சார வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும்.
Car loan Information:
Calculate Car Loan EMI