தி லயன் கிங்:


‘ஸ்கார்’ என்ற வில்லனின் சதியால் தன் தந்தையை இழக்கிறது சிம்பா என்ற குட்டி சிங்கம்.  உண்மையை அறிந்த பின்னர், வில்லனுடன் சண்டையிட்டு காட்டு விலங்குகளை காப்பாற்றி, தன் தந்தையின் இடத்தை சிம்பா பிடிக்கும் கதைதான் தி லயன் கிங். கடந்த 1994-ஆம் ஆண்டு அனிமேஷன் வடிவில்தான் முதன் முதலில் இப்படம் வெளியானது. வெளியான புதிதிலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிட்ட படம் இது. அது மட்டுமன்றி, Hakuna Matata (கவலையேதுமில்லை) என்ற வாழ்வியல் மந்திரத்தை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தது இந்த படம். வருடங்கள் பல கடந்து விட்டாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆகையால், இப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டது வால்ட் டிஸ்னி நிறுவனம்.  அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் 3 டி வடிவில் தயாரிக்கப்பட்டு தி லயன் கிங் படம் வெளியானது. 


தி லயன் கிங் படம், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது. இதில், படத்தின் ஹீரோவான சிம்பாவின் கதாப்பாத்திரத்திற்கு, நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்திருந்தார். வில்லனான, ஸ்கார் கதாப்பாத்திர்த்திற்கு நடிகர் அரவிந்த் சாமி, டப்பிங் பேசியிருந்தார். இவர்கள் மட்டுமன்றி, நடிகர்கள் மனோபாலா, சிங்கம் புலி, ஐஸவர்யா ராஜேஷ் ஆகியோரும் டப்பிங் பேசியிருந்தனர். படம், உலகளவில் வெளியாகி, நல்ல் ஹிட் கொடுத்தது.


புதுமையை புகுத்தும் வால்ட் டிஸ்னி!


பொம்மை படங்கள் என்றால், அனைவருக்கும் கொள்ளை பிரியம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால்,வால்ட் டிஸ்னி எடுக்கும் அனிமேஷன் படங்கள், குழந்தைகள் மட்டுமன்றி, அனைத்து வயதுடையோரையும் தன்வசம் இழுக்கும் திரன் கொண்டது. லிட்டில் மர்மைட், ப்யூடி அன்ட் த பீஸ்ட், அலாதீன், சின்ட்ரெல்லா உள்ளிட்ட படங்கள் உலகப்பகழ் பெற்றவை. அனிமேஷன் வடிவில் மட்டுமே தயாரிக்கப்பட்ட இவ்வகையான திரைப்படங்களை, சிறிது பட்டி-டிங்கரிங் பார்த்து நிஜ மனிதர்களை வைத்து எடுத்தது வால்ட் டிஸ்னி நிறுவனம். க்ராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்ட செட் என வேறு சில அம்சங்களையும் இணைத்து, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் வகையில் படங்களை எடுக்க துவங்கியது டிஸ்னி. அப்படி எடுக்கப்பட்ட படங்களின் லிஸ்டில் தி லயன் கிங்கும் ஒன்று.  




முஃபாசாவின் கதை:


தி லயன் கிங் படத்தில் சிம்பாவின் ஹீரோவாக வந்த முஃபாசாவின் கதையை வைத்து முஃபாசா: தி லயன் கிங் படத்தை 2024-ஆம் ஆண்டில் வெளியிடவுள்ளதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. தி லயன் கிங் படத்தின் Prequel-யாக(முன்கதை) இடம்பெற்றுள்ளது.


 






இதில், முஃபாசா காட்டு ராஜாவாக உயர்ந்தது எப்படி? அவனுக்கு எதிரியாக ஸ்கார் உருமாறிது ஏன்? உள்ளிட்ட கதைகள் படத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் வெளியான இரண்டு லயன் கிங் படங்களும், வசூல் சாதனை பெற்றதால், இந்த படமும் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.