Mrunal Thakur: இந்தியப் பெண்களின் இடை இப்படிதான் பெரும்பாலும் இருக்கு.. உருவக்கேலிக்கு மிருணாள் தாக்கூர் பதில்!

Mrunal Thakur: தனது உடலைக் குறித்து தான் அதீத தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருந்ததாக நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மிருணாள் தாக்கூர் (Mrunal Thakur). தொடர்ந்து நானி உடன் இணைந்து ‘ஹாய் நானா’ மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்லா விதமான கதாபாத்திரங்களில் அழகாகவும் திறமையான நடிப்பையும் வெளிப்படுத்த முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து குறைவான காலத்தில் அதிக அளவிலான ரசிக கவனத்தை ஈர்த்தவர்களில் மிருணாள் தாக்கூர் ஒருவர்.

Continues below advertisement

திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரத் தொடங்கியிருக்கும் மிருணாள் தாக்கூர், அவர் மீதான விமர்சனங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்வினையாற்றி வருகிறார். தனது உடலை வைத்து உருவக் கேலி செய்யும் வகையிலான கருத்துக்களுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் மிருணாள் தாக்கூர்.

என் உடல் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தேன்!

இந்த நிகழ்ச்சியில் பேசிய மிருணாள் தாக்கூர் “ஆரம்பத்தில் என்னுடைய உடலைப் பற்றி நான் ரொம்ப தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தேன். என்னுடைய படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் வெளியே செல்லாமல் நாட்கணக்கில் வீட்டுக்குள் அடைந்து கிடப்பேன்.

ஆனால் நாம் அப்படி கிடப்பதால் யாரும் நமக்கு உதவ வரமாட்டார்கள் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.  சமூக வலைதளங்களில் பலர் என் உடலை உருவக்கேலி செய்து வருகிறார்கள். இந்தியப் பெண்கள் பலர் வளைந்த இடுப்பைக் கொண்டவர்கள் தான். ஆனால் நாம் ஹாலிவுட் பிரபலங்களான கிம் கார்தர்ஷியன் போன்றவர்களை நம் அழகிற்கான அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறோம்.

இதுதான் அழகு என்று இருக்கும் இங்கு பொது வரையறைகளை நான் உடைத்து எறியப் போகிறேன். என்னுடைய உடலை கொண்டாடுவேன்.  நாம் தினமும் தெருவில் பார்க்கும் இந்தியப் பெண்கள் அனைவரும் பெரிய இடையைக் கொண்டவர்கள் தான். அவர்கள் அனைவரும் அவ்வளவு அழகான பெண்கள். என்னுடைய உடலை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது எல்லாம் எந்த மாதிரியான ஆடையாக இருந்தாலும் அதை அணிந்துகொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola