" தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் "
  



சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும்  போதை சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில்,  கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள்  இதுபோக பல்வேறு விதமான போதை வஸ்துக்கள்  விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   ஒருபுறம் காவல்துறையினர் போதைப் பொருட்களை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  அவை போதுமானதாக இல்லை என்பதை பொதுமக்களின் குற்றச்சாட்டாக  இருக்கிறது.  போதை பொருட்கள் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில்,  அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கையும் இழந்து வருகிறது.  அதே போன்று தொழில் நகரமாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூரிலும்  போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது.  இதனை காவல்துறையினும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்ட நிலையில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.





 தொழில் நகரம் ஸ்ரீபெரும்புதூர்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 தொழில் பூங்காக்களில்  ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு பணியாற்றும் வடமாநில தந்தவர் உட்பட பலர் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அதையும் தாண்டி போதை மாத்திரை போதை ஊசிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் போதை பொருட்களை ஒழிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

 

 இரண்டு சிறார்கள் உட்பட 10 பேர் கைது 


 

இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை உபயோகித்து விற்பனை செய்து வந்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரிஷப்/18, அபினேஷ்/23,  மோகன்பாபு/21,  சரவணன்(எ)தேள் சரவணன்/23, பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்த அரவிந்த் /23,  கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஈஸ்டர் ராஜ்/23,  சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன்ஜோ/23, தாம்பரத்தைச் சேர்ந்த தமீம்/22 மற்றும் இரண்டு சிறார்கள் உட்பட 10 பேரை கைது செய்து இவர்களிடம் இருந்த போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




 போதை ஊசிகள் விற்பனை நடந்தது எப்படி ? 


 ஒரு சில  மாத்திரை வைக்கும்  டீலர்கள்,  கடைகளில் தொடர்பு வைத்துக்கொண்டு  மாத்திரையை வாங்குவது .அதை 100mg மாத்திரைகளை ஒரு மாத்திரை 38 ரூபாய்க்கு வாங்கி அதை தண்ணீரில் கலந்து சிரஞ்சியில் ஏற்றி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து கொல்லை லாபம் பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   அதேபோன்று போதை தரும் மாத்திரைகளையும் அதிகளவு இந்த கும்பல் விற்று வந்துள்ளது.  குறிப்பாக ஒரு மாத்திரை அட்டையை  400 இல் இருந்து 600 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.  பெரும்பாலான இடங்களில் போதை ஊசி அதிகம் விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த கும்பல் பல்வேறு  நபர்களுடன் தொடர்பில் இருப்பதும் விசாரணை தெரிய வருகிறது.  இவருடன் தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களையும் கைது செய்யும் பணியை   மேற்கொண்டு வருகின்றனர்.