தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர் 'சீதா ராமம்' படம் மூலம் ஏராளமான ரசிகர்களின் இதயங்களை வென்றார். சமீபத்தில் நானி, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. சீதா ராமம் மற்றும் ஹாய் நான்னா படங்கள் மிருணாள் தாக்கூருக்கு மிகப்பெரிய புகழையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. ரசிகர்கள் அவரை சீதா மஹாலக்ஷ்மி என்று அழைக்கும் அளவுக்கு அவரின் கதாபாத்திரம் மிகவும் வலுவாக அமைந்தது. 


 



ஃபேமிலி ஸ்டார் படத்தில் மிருணாள் :


தற்போது எஸ்.வி.சி நிறுவனத்தின் தயாரிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில்,  விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து "ஃபேமிலி ஸ்டார்" என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. 


பாடி ஷேமிங் :


சமீபத்தில் மிருணாள் தாகூர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது இயக்குநர் ஒருவர் அவரை பாடி ஷேமிங் செய்தது பற்றி மனம் திறந்துப் பேசி இருந்தார். ஆடிஷன் ஒன்றுக்கு சென்ற சமயத்தில் இயக்குநர் ஒருவர் “நீ கவர்ச்சியாக இல்லை, அதனால் உன்னால் இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியாது” எனக் கூறியுள்ளார். அதை கேட்டு குழப்பமடைந்த மிருணாள் தாக்கூர் 'நீங்கள் கேரக்டரை பற்றி பேசுகிறீர்களா அல்லது என்னைப் பற்றி பேசுகிறீர்களா?' எனக் கேட்டதற்கு அந்த கேரக்டரில் கவர்ச்சியான நடிகையாக உன்னை பார்க்க முடியாது என பதில் அளித்துள்ளார். 


 



இந்நிலையில், “என்னுடைய கால் விரலை கூட கவர்ச்சியாக காட்ட முடியும். அது எனக்குத் தேவையில்லை, அதை நான் விரும்பவில்லை. என்னை கதாபாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்க தயாரிப்பாளர்களால் முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை. ஒரு களிமண்ணாக இருக்க விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் என்னை மோல்ட் செய்ய முடியும்” என மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.


சரியான நோஸ்கட்:


மேலும் பேசுகையில் திரைப்படத்துறை எப்படி அவரை பார்க்கிறது, கவர்ச்சி என்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றியும் பேசி மிருணாள் இருந்தார். ஒரு பாடலின் படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் ஒருவர் மிருணாளிடம் வந்து “நீங்கள் கவர்ச்சியாக தோன்ற வேண்டும் என்றால் உங்கள் எடையைக் குறைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். அதைக்கேட்டு கோபமான மிருணாள் தாகூர் "எனக்கு தடித்த தொடை உள்ளது. அது என்னுடையது உடல் பாகம் தான். ஆனால் எனக்கே அது அசௌகரியமாக இல்லாத போது, உங்களுக்கு ஏன் அப்படி தோன்றுகிறது?" என திருப்பிக் கேட்டுள்ளார் மிருணாள்.  இந்த அனுபவம் குறித்தும் தற்போது மிருணாள் தாகூர் பகிர்ந்துள்ளார்.