Liger Twitter Review:  “ஐ ஸ்மார்ட் சங்கர்”,  “போக்கிரி” ஆகிய மாஸ் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத், லிகர் படத்தின் இயக்குநர் ஆவார். லாக்டவுன் காரணமாக இப்படம் ஒத்திவைக்கப்பட்ட  நிலையில் வரும் இன்று இப்படம் வெளியானது. லிகர் படத்தின் ஹைலைட்டே, மைக் டைசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான்.மைக் டைசன் இதற்கு முன்பாக, ஹாங் ஹோவர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதைகளமானது, விஜய் தேவரகொண்டா ஒரு டீ கடை வியாபாரியாக இருந்து, இந்தியன் பாக்ஸராக MMA பட்டத்தை எப்படி வென்று காட்டுகிறார் என்பதை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.


ALSO READ | Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!


பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியான லிகர் திரைப்படம் எப்படி இருக்கிறது என ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் லிகர் திரைப்படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரமோஷனில் காட்டிய ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் படத்தின் திரைக்கதையில் காட்டி இருக்கலாம் என ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்