Lal Salaam Release LIVE: அப்பாவை திரையில் செதுக்கிய ஐஸ்வர்யா: பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் லால் சலாம்!
Lal Salaam Release LIVE Updates: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அப்படம் பற்றிய அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
பேச்சி ஆவுடையப்பன்Last Updated: 09 Feb 2024 01:19 PM

Background
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம்...More
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லால் சலாம்”. 3, வை ராஜா வை படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா இயக்கியுள்ளது பட அறிவிப்பு வெளியானபோதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்வும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி பிறந்தநாளன்று இதனிடையே கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சாய் ராம் கல்லூரியில் வைத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லால் சலாம் படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான கொண்டாட்டங்கள் நள்ளிரவு முதல் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
Lal Salaam Release LIVE : லால் சலாம் படத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய மலேசியா ரஜினி ரசிகர்கள்
லால் சலாம் படத்தை தமிழ்நாடு, கேரளா, மற்றும் ஆந்திரா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் மலேசியாவில் ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.