நாள் - 08.12.2023 - வெள்ளி கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
பகல் 1.45 மணி முதல் பகல் 2.45 மணி வரை
இராகு:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
குளிகை:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
எமகண்டம்:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
காப்பீட்டுத் துறைகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். விரும்பியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பக்தி மேம்படும் நாள்.
ரிஷபம்
நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
மிதுனம்
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். விலகிச் சென்றவர்களைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை விற்றல், வாங்கலில் லாபம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடகம்
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். தகவல் தொடர்புத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தொழிலில் மேன்மை உண்டாகும். எதிர்ப்பு குறையும் நாள்.
சிம்மம்
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களைப் பெறுவீர்கள். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.
கன்னி
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். காப்பீடு பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். மதிப்பு மேம்படும் நாள்.
துலாம்
வர்த்தகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். அன்பு மேம்படும் நாள்.
விருச்சிகம்:
மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் விலகும். விரும்பிய சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
தனுசு
உயர் கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.
மகரம்
பெரியோர்களிடம் விதண்டாவாதங்களைத் தவிர்க்கவும். உறவுகளைப் பற்றிய புரிதல் மேம்படும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த தேடல் பிறக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். உயர் கல்வியில் தெளிவு பிறக்கும். தடங்கல் விலகும் நாள்.
கும்பம்
இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நவீனத் தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். அனுபவம் மேம்படும் நாள்.
மீனம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வர்த்தகப் பணிகளில் விவேகம் வேண்டும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இனிமை நிறைந்த நாள்.