மெளனகுரு, மகாமுனி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் அடுத்ததாக ரசவாதி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சாந்தகுமார். கிட்டதட்ட 12 ஆண்டுகளில் தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார் இயக்குநர் சாந்தகுமார்.


இயக்குநர் சாந்தகுமார்


அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌனகுரு . இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியில் இந்தப் படத்தை அகிரா என்கிற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் முருகதாஸ்.  


இந்த வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை இயக்கினார் சாந்தகுமார். சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு செம்படம்பர் 6-ஆம் தேதி மகாமுனி என்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம் வெளியானது. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.


 ஆர்யா இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்த  படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க , இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றது மகாமுனி.


 


ரசவாதி






தற்போது தனது மூன்றாவது படமாக ரசவாதி என்கிற படத்தை இயக்கியுள்ளார் சாந்தகுமார். எழுதி இயக்கியது மட்டுமில்லாமல் இந்தப் படத்தை தனது சொந்த நிறுவனத்தின் கீழ் தயாரித்தும் இருக்கிறார். சமீப காலங்களில் தனது குரலுக்காக அதிகம் பாராட்டப்படும் நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் கதாநாயகனாக  நடித்துள்ளார் ரம்யா சுப்ரமணியம் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளார்கள், தமன் இசையமைத்து தேசிய விருது வென்ற சாபு ஜோசப் பத்தொகுப்பு செய்துள்ளார்.  சமீபத்தில் ரசவாதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர். தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் நைத்து வரும் அர்ஜுன் தாஸின் கரியரில் முக்கியமான படமாக ரசவாதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.