உலகமே இன்றைக்கு நண்பர்கள் தினத்தைக் கொண்டாடி வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று நண்பர்களைக் கொண்டாடிய தமிழ் திரைப்படங்கள் குறித்து காணலாம். 


நட்பை கொண்டாடிய படங்கள்:


நட்பைக் கொண்டாடிய படம் என்றாலே, அதில் முக்கிய இடம் பிடிக்கும் படங்களில் ‘’இணைந்த கைகள்” படத்திற்கு தனி இடம் உண்டு. அப்படத்தில் வரும் அந்திநேர தென்றல் காற்று பாடலில் உள்ள  ”தாலாட்ட அன்னை உண்டு சீராட்ட தந்தை உண்டு இன்பதுன்பம் எது வந்தாலும் பங்கு கொள்ள நண்பன் உண்டு” எனும் வரிகளும்,  படத்தின் திரைக்கதையும் பார்வையாளர்களை கொண்டாட வைத்தது.


தளபதி:


அதேபோல் இன்றைக்கும் நட்பு என்றாலே, தமிழ் சினிமா ரசிகர்கள் உச்சரிக்கும் வசனம், நட்புனா யாருனு தெரியுமா? நன்பண்னா யாருனு தெரியுமா? சூர்யானா யாருனு தெரியுமா?  என்ற வசனமும், “ பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே” என்ற பாடல் நட்பைக் கொண்டாடியது. 


முஸ்தபா - முஸ்தபா:


அதேபோல், காதல் தேசம் திரைப்படம். இப்படம் கல்லூரிகாலத்திலான நட்பை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும். இப்படத்தில் வரும் “ முஸ்தபா முஸ்தபா பாடல்” படம் வெளியான காலம் முதல் இன்று வரை கொண்டாடப்படுகிறது. இப்பாடல் ஒலிபரப்பப்படாத கல்லூரி ஃபேரவெல் நாட்கள் கிடையாது. அதேபோல் நட்புக்காலம் படத்தில் வரும் ‘’மனசே மனசே மனசில் பாரம்” பாடலும் ஒலிக்கப்படாத கல்லூரி இறுதி நாட்கள் கிடையாது. 


ப்ரண்ட்ஸ் - நண்பன்:


விஜய் நடிப்பில் ப்ரண்ட்ஸ் படம் வெகுவாக மக்களை ரசிக்கச் செய்திருந்தாலும் அப்படத்தில் பெரும் வரவேற்பு பெற்றது முதல் பாதியில் வரும் காமெடி காட்சிகள்தான். ஆனால் விஜய் நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நட்பை மைய்யப்படுத்திய படம் என்றால் அது நண்பன். உயிருக்கு உயிரான நண்பனுக்காக நண்பர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை வெளிக்காட்டி இருக்கும். அதிலும்” நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைக்கிறதா” பாடல் தோழனை, தோழியை இழந்த அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. 


ப்ரியமான தோழி:


ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் உள்ள தோழமையை மிகவும் அழகாக காட்டிய படங்களில் ப்ரியமான தோழிக்கு எப்போதும் டாப் ப்ளேஸ்தான். அதேபோல் ஆண் பெண் தோழமைகளை நேர்த்தியாக காட்டிய படங்கள் ப்ரியமான தோழி படத்திற்கு முன்னரும் பின்னரும் வந்திருந்தாலும், ப்ரியமான தோழி படம் தான் எவர் கிரீன் படமாக இப்போதும் உள்ளது. 


ஜீவா, வினய், சந்தானம் நடிப்பில் வெளியாகி மூன்று நண்பர்களை உள்ளடக்கிய படம் ’என்றென்றும் புன்னகை’.  இப்படத்திற்கென இப்போது வரை தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


அதேபோல், குசேலன், நட்புக்காக, இனிது இனிது , புன்னகை தேசம் என தமிழ்சினிமா என்றைக்குமே நட்பைக் கொண்டாட தவறியதில்லை. வரும் காலங்களிலும் நட்பைக் கொண்டாடக்கூடிய படங்கள் வரத்தான் போகிறது. அதை ரசிகர்கள் கொண்டாத்தான் போகிறார்கள்.