பாகுபலி என்னும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு பிறகு ராஜமௌளி கையில் எடுத்திருக்கும் திரைப்படம்தான் RRR. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.







ராஜமௌளி திரைப்படம் என்றாலே , பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. அதே போல சுதந்திர இந்தியாவுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடந்த இரண்டு நண்பர்களுக்கான போராட்டத்தை பிரமிக்க வைக்கும் வகையில் எடுத்து  ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ராஜமௌளி. டோலிவுட்டின் இரு பெரும்  நடிகர்களை ஒரே திரையில் காண்பிக்கும் போது அவர்களுக்கான  மாஸான காட்சிகள் இடம்பெற வேண்டியது அவசியம். ஆர்.ஆர்.ஆர் டிரைலரை பார்க்கும் பொழுது நிச்சயம் அவரது ரசிகர்களை திருப்திபடுத்தும் என நம்பலாம். தற்போது வெளியாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 6 ஆம் தேதி வெளியாக இருந்த படத்தின் டிரைலர் , ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் பாடலாசிரியர் திடீர் மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தகக்து.










கொரோனா ஊரடங்களால் வெளியீடு தாமதமான படங்களில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ஒன்று. படம் தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  உலகம் முழுவதும் உள்ள முக்கியமான திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகுதான் படத்தை வெளியிடுவேன் என உறுதியாக இருந்தார் ராஜமௌளி .படம் தற்போது ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ள படக்குழுவினர் நாளை சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் புரமோஷன் வேலைகளை தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Press meet Link: