பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் திரைப்படம் மீதான ஈடுபாட்டை விட சீரிஸ் என்னும் வெப் தொடர் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உலகின் பல நாடுகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வெப் தொடர்தான் மணி ஹைஸ்ட். வங்கிகளில் கொள்ளையடிக்கும் வழக்கமான கொள்ளைக்கார கதைத்தான் என்றாலும் அதில் பல புதுமைகளை புகுத்தி அசத்தியிருந்தார் இயக்குநர்.
குறிப்பாக கொள்ளைக்கார கும்பல்களை ஹீரோக்களாக நினைக்கும் படியாக கதையில் பல ட்விஸ்ட் அண்ட் டெர்ன்ஸை கொடுத்திருந்தார் இயக்குநர். மணி ஹைஸ்ட்டின் சீரிஸின் நான்கு சீசன்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இதன் ஐந்தாவது சீசனின் முதல் வால்யூம் வெளியானது. அதில் பலருக்கும் ஃபேவரெட்டான டோக்கியோ மரணம் அவரின் ரசிகர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. கூடுதலாக ஃபுரஃபசரும் மாட்டிக்கொண்டார். இந்த சூழலில் ஐந்தாவது சீசனின் முதல் வால்யும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஐந்தாவது சீசனின் இரண்டாவது வால்யூம் வருகிற டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நினைவூட்டலை வழங்கியுள்ள நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ”உலகத்தின் மிகச்சிறந்த திருட்டு முடிவுக்கு வருகிறது ...டிசம்பர் 3 ஆம் தேதி ..உங்கள் நெட்ஃபிளிக்ஸில் “ என குறிப்பிட்டு , தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் டிரைலரை பகிர்ந்துள்ளது.
மணி ஹைஸ்ட் என்னும் பிரம்மாண்ட வெப் தொடரே , வெப் சீரிஸின் புரட்சிக்கு முதல் முக்கிய காரணம் எனலாம். அந்த அளவுக்கு உலகம் முழுக்க இதற்கான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே வெளியான 5 பாகங்களும் அத்தனை சுவாரஸ்யமானது. டோக்கியோ கதைகளை நெரேட் செய்வது போல அமைந்த இந்த தொடரின் , தமிழ் டப்பிங்கில் குரல் கொடுத்திருந்தார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்.