L2- Empuraan : மோகன்லால் - பிருத்விராஜ் இணையும் லூசிஃபர் 2 எம்புரான்...400 கோடி பட்ஜெட் 


மோலிவுட் சூப்பர் ஹீரோ மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமானது. நடிகர் பிருத்விராஜ் இயக்குனராக பணியாற்றிய முதல் திரைப்படம் லூசிஃபர். அதன் வெற்றியை தொடர்ந்து பிருத்விராஜ் லூசிஃபர் - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் படங்களில் நடிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். 


லூசிஃபர் 2 - எம்பூரான் அதிகாரபூர்வ அறிவிப்பு:


இந்த நிலையில் தற்போது லூசிஃபர் 2 - எம்பூரான் திரைப்படம் விரைவில் இயக்கப்படும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு புதன்கிழமை அன்று  வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படம் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. சுமார் 400 கோடி ருபாய் செலவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 


 






பான் - உலக படமாக வெளியிட ஆசை :


லூசிஃபர் 2 - எம்பூரான் திரைப்படத்தையும் இயக்க உள்ளார் நடிகர் பிருத்விராஜ். இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டேர்டைன்மெண்ட் படமாக இருக்கும். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது. இருப்பினும் இப்படத்தை பான் - உலக படமாக வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார் நடிகர் பிருத்விராஜ். இப்படத்தின் முதல் பகுதியில் கிடைத்த வெற்றியே இந்த பட குழுவினருக்கு அந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. 


பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் :


லூசிஃபர் படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த சாதனை 2016ம் ஆண்டு வெளியான மோகன்லால் நடித்த புலிமுருகன் திரைப்படத்தை தொடர்ந்து மலையாள படத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றியாகும். 


L2 : எம்பூரான் திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற விவரங்கள் இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. லூசிஃபர் படத்திற்கு வசனம் எழுதிய முரளி கோபி தான் எம்பூரான் படத்திற்கும் திரைக்கதையை எழுதியுள்ளார். ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க உள்ளார். 


 






தெலுங்கு ரீமேக் :


லூசிஃபர் திரைப்படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. கொனிடேலா புரொடக்‌ஷன் கம்பெனி மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் சத்யா தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான் இப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.