சினிமா வரலாற்றில் தற்போது பெரும் பங்காற்றி வருகிறது ஓடிடி தளம். அந்த வகையில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் இந்திய தலைவர் பதவியில் இருப்பவர் மாதவன். அவரது வீட்டில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். 



ஜெய்ப்பூரில் கூடிய தென்னிந்திய நடிகர்கள் :


உலகளவில் முன்னணி வகிக்கும் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் நிறுவனம் இந்தியாவிலும் பிரபலமாகி முன்னணியில் இருந்து வருகிறது. அதன் இந்திய தலைவர் மாதவனின் மகன் கௌதம் மாதவன் திருமண விழா ஜெய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பிரபல முன்னணி நடிகர்களான மோகன்லால், கமல்ஹாசன், அக்ஷய் குமார், அமீர்கான், பிருத்விராஜ், கரன் ஜோஹர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  






பஞ்சாபி டான்ஸ் ஆடிய நடிகர்கள் :


நமது தமிழ்நாடு பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் கலக்கலாக கலந்து கொண்டார் உலகநாயகன் கமல்ஹாசன். அதே போல மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் மற்றும் பல நடிகர்கள் ட்ரெடிஷனல் உடையில் மிகவும் கெத்தாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த திருமண நிகழ்ச்சியில் மிகவும் குஷியாக இருந்த நடிகர்கள் நடனமாடி கொண்டாடினர். அப்போது அக்ஷய் குமார் மற்றும் மோகன்லால் இருவரும் பஞ்சாபி ஸ்டைலில் பங்காரா இசைக்கு டான்ஸ் ஆடியது அங்கிருந்த அனைவரையும் சந்தோஷப்படுத்தியது. இருவரும் கால்களை தூக்கி சேர்த்து வைத்து ஆடிய நடனத்தை கரண் ஜோஹர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


மறக்க முடியாத ஆட்டம் :


மேலும் நடிகர் அக்ஷய் குமாரும் இந்த அல்டிமேட் நடனத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து "என் வாழ்நாளில் இந்த நடனத்தை நான் மறக்க மாட்டேன். என்றுமே இது என் நினைவில் இருக்கும்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது. 






அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகிவரும் 'செல்ஃபி' திரைப்படத்தின் 'வைப்' என்ற பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அப்பாடலில் அக்ஷய் குமாருடன் இணைந்து மிருணாள் தாகூர் போட்ட ஆட்டம் இன்றும் ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்து வரும்  நிலையில் மோகன்லாலுடன் இணைந்து அக்ஷய் குமார் ஆடிய ஆட்டம் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 


ரீ டேக் செய்த மோகன்லால் :


அக்ஷய் குமார் ட்வீட்டை நடிகர் மோகன்லால் ரீ டேக் செய்து 'ஜெய்ப்பூரில் நடைபெற்ற அன்பிற்குரிய கௌதம் மேனன் திருமண கொண்டாட்டத்தில் ஒன் அண்ட் ஒன்லி அக்ஷய் குமாருடன்  போட்ட இந்த அற்புதமான லெக் டான்ஸ்" என பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் இணையத்தில் மிகவும் அதிகமாக பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.